புலிக்களி
(புலிக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
புலிக்கலை (പുലിക്കളി) | |
---|---|
![]() ஓணம் விழாவிற்கு திருச்சூர் நகரில் நடைபெற்ற புலிக்கலை நடனம் | |
வகை | புலியாட்டம் |
நாள் | கொல்ல ஆண்டு நான்காம் நாள் ஓணம் திருவிழாவின் போது |
அமைவிடம்(கள்) | திருச்சூர் நகரம், கேரளா, இந்தியா |
நிறுவல் | 1886 |
வருகைப்பதிவு | 30,001 |
புலிக்கலை என்பது கேரளாவில் நிகழ்த்தப்படுகின்ற நாட்டுப்புறக் கலையாகும். இந்த நடனத்தினை ஓணம் விழாக்காலத்தில் திருச்சூர் பகுதியில் நடத்துகிறார்கள். [1]
புலிக்கலை வல்லுநர்கள் ஓணம் விழாவின் நான்காம் நாளில் திருச்சூரில் கூடி இந்த நிகழ்வினை நடத்துகிறார்கள். உலகமெங்கும் உள்ள ஆர்வலர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். உடல் முழுவதும் புலியைப் போலவோ, சிறுத்தையைப் போலவோ வரைந்து, முன்வயிற்றில் புலி அல்லது சிறுத்தையின் முகத்தினை வரைந்து கொண்டு இந்தக் கலைக்கே உரிய வகையில் நடனம் ஆடுகின்றனர்.
சிவாலயங்களில் புலிக்கலை[தொகு]
சிவாலயங்களின் கருவறை சுற்றுச்சுவரில் காணப்படும் பூதவரிகளில் சில பூதங்கள் புலிக்கலையில் உள்ளவாறு புலி, சிங்கம், கழுகு போன்ற முகங்களை வயிற்றில் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பூதங்களின் வயிற்றில் காணப்படும் முகங்களுக்கு உதரேமுகம் என்று பெயர்.