பழசி அணை
Pazhassi Dam Kuyilur Barrage | |
---|---|
![]() | |
அமைவிடம் | கேரளம், கண்ணூர் மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 11°58′42″N 75°36′43″E / 11.97833°N 75.61194°E |
நோக்கம் | நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவை |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | 1979 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 18.99 மீட்டர்கள் (62.3 ft) |
நீளம் | 245 மீட்டர்கள் (804 ft) |
வழிகால்கள் | 16 |
வழிகால் வகை | Radial gates |
வழிகால் அளவு | 3,510 கன சதுர மீட்டர்கள் (124,000 cu ft) per second |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 97,500,000 m3 (79,045 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 97,500,000 m3 (79,045 acre⋅ft) |
மேற்பரப்பு பகுதி | 6.5 km2 (3 sq mi) |
இயல்பான ஏற்றம் | 26.52 மீட்டர்கள் (87.0 ft) |
பழசி அணை (Pazhassi Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அணைக்கட்டாகும். இதற்கு உள்ளூர வீரரான மன்னர் பழசி இராசாவின் பெயரிடப்பட்டுள்ளது. இது வெலியம்பிரா அருகே மேற்கு நோக்கி பாயும் வளப்பட்டணம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையானது 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாயால் திறந்துவைக்கபட்டது. இது முதன்மையாக நீர்ப்பாசன அணையாக செயல்படுகிறது, இதிலிருந்து கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி மற்றும் தாலிபராம்ப்ரா வட்டங்களில் 11,525 எக்டேர்கள் (28,480 ஏக்கர்கள்) பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த அணையிலிருந்து வரும் நீரானது கண்ணூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையையும் நிறைவு செய்கிறது. அணை அமைந்துள்ள இடம் மற்றும் நீர்த்தேக்கம் ஆகியவை அவற்றின் அழகுக்காக பிரபலமானவை.[1] [2]
இடவியல்[தொகு]
வாலபட்டணம் ஆற்றின் குறுக்கே குயிலூரில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது குடகில் ( கர்நாடகம் ) 2,500 அடிகள் (760 m) ) உயரத்தில் தோன்றுகிறது. மேலும் 1,028 சதுர கிலோமீட்டர்கள் (397 sq mi) நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டதாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியின் சராசரி ஆண்டு மழையளவு 3,622 மில்லிமீட்டர்கள் (142.6 in) ஆகும். அணை பகுதிக்கு அருகிலுள்ள நகரங்கள் மட்டனூர் மற்றும் இரிட்டி ஆகும். [1]
படக்காட்சியகம்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Pazhassi Irrigation Project JI02676". Central Water Commission. 2013-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "National Register of Large Dams" (PDF). Central Water Commission. 19 February 2018 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 11 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
பொதுவகத்தில் பழசி அணை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.