ஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை
எஸ். எம். பி அரண்மனை
SMP Palace in Kollam city, Apr 2017.jpg
ஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்தியா
நகரம்கொல்லம் நகரம், கண்டோன்மண்ட்
நாடுஇந்தியா
ஆள்கூற்று8°53′01″N 76°35′33″E / 8.883594°N 76.592508°E / 8.883594; 76.592508
நிறைவுற்றது1936
கட்டுவித்தவர்ஸ்ரீ மூலம் சாஷ்டியப்த பூர்தி நினைவு அறக்கட்டளை

ஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை அல்லது எஸ். எம். பி அரண்மனை அல்லது எஸ். எம். டி அரண்மனை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொல்லம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது 1936 ஆம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூரின் ஆட்சியாளரான மூலம் திருநாள் ராம வர்மாவின் சஷ்டியப்த பூர்த்தியின் (60 வது பிறந்த நாள்) நினைவாக கட்டப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னரான மூலம் திருநாள் ராம வர்மாவின் சாஷ்டியப்த பூர்த்தியை (60 வது பிறந்த நாள்) நினைவுகூறும் வகையில் ஸ்ரீ மூலம் அரண்மனை ஒரு நகர மண்டபமாக கட்டப்பட்டது. கொல்லம் மக்கள் 1917 இல் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் நகர மண்டபம் (டவுன்ஹால்) கட்ட ஸ்ரீ மூலம் சாஷ்டியப்த பூர்தி நினைவு அறக்கட்டளை என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கட்டுமானத்திற்காக அப்போதைய அரசு 1.15 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்திருந்தது. ஆனால் அரண்மனையின் கட்டுமானம் மன்னரின் மரணத்திற்குப் பிறகுதான் நிறைவடைந்தது. மூலம் திருநாள் ராம வர்மா 1924 இல் இறந்தார். நகர மண்டபம் 1936 இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், அதிகாரிகள் அரண்மனையை திரைப்பட அரங்காக மாற்றியுள்ளனர். எஸ்.எம்.பி அரண்மனை கொல்லத்தின் மிகப் பழமையான திரையரங்காக இருக்கலாம். [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Kollam to have heritage museum". 2013.
  2. "Tale of a theatre". 2005.