ஒளப்பமண்ணா மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளப்பமண்ணா மனை (ஆங்கிலம்: Olappamanna Mana ) என்பது ஒரு பாரம்பரியக் கட்டடம் ஆகும். ஒளப்பமண்ணா என்ற பெயரிலுள்ள ஒரு நம்பூதிரி குடும்பத்தின் பரம்பரை இல்லமாகும். கேரளா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட எட்டுகட்டு (எட்டு பிரிவுகளைக் கொண்ட ஒரு கட்டிடம் இரண்டு முற்றங்களால் இணைக்கப்பட்டிருக்கும் ) என்ற இந்தக் கட்டிடம் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் செறுபுலச்சேரியில், குந்திப்புழா நதிக்கரையிலுள்ள வெள்ளிநேழி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஒற்றப்பாலம் புகைவண்டி நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் 57 கி.மீ தூரத்தில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமாகும்

விவரம்[தொகு]

ஒளப்பமண்ணா (கவிஞர்)

20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, இது 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. மேலும் இது பரந்த நிலத்தால் சூழப்பட்டுள்ளது. [1] சில பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டன, அவை சுமார் 200 ஆண்டுகள் பழமையானவை (ஏப்ரல் 2019 நிலவரப்படி). [2] இந்த இடம் இப்போது 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. இது நம்பூதிரிக் குடும்பத்தின் சந்ததியினரால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் கலாச்சார சுற்றுலாவை வழங்குகிறது. ஆரம் தம்புரான், பரிணயம் மற்றும் தன்மாத்ரா ஆகிய மூன்று மலையாள படங்களின் முதன்மை புகைப்படம் இதன் வளாகத்தில் எடுக்கப்பட்டது. [3]

புகழ்பெற்ற கதகளி கலைஞரான பட்டிக்காம்தொடி ராவுண்ணி மேனனால் அடிக்கடி குறிப்பிடப்படும் இந்த வீடு, கதகளியின் மரபுகளில் ஒன்றான கல்லுவழி சிட்டையை ஊக்குவிக்க அவருக்கு உதவியது. [4] பாரம்பரியத்தை பரப்பிய கதகளி பள்ளியான ஒளப்பமண்ணா கலியோகம், இந்த வீட்டின் வளாகத்தில் இருந்து கேரள கலாமண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் வரை இந்த நிறுவனத்தின் நிறுவனர் வள்ளத்தோல் நாராயண மேனனால் செயல்படுத்தப்பட்டது. [5] கேரளாவின் கலாச்சார, இலக்கிய, மொழியியல் மரபுகளை ஊக்குவித்ததாக அறியப்பட்ட [6] இந்த வீடு பல அறிஞர்கள், கலை ஆர்வலர்கள், எழுத்தாளர்களைப் பெற்றெடுத்துள்ளது. அவர்களில் ஓ.எம்.நாராயணன் நம்பூதிரிப்பாடு (1838-1902), ஓ.எம்.நீலகண்டன் நம்பூதிரிப்பாடு (1863-1935),ஆகிய இருவரும் சமசுகிருத அறிஞர்களும் வேத ஆசிரியர்களும் ஆவர். துருவ சரிதம் கதகளி நாடக எழுதியவரும், (1890) , இராவ் பகதூர் பட்டத்தை வைத்திருப்பவரும் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினருமான ஓ.எம்.வாசுதேவன் நம்பூதிரிப்பாடு, (1881-1926), சாகிதி என்ற மலையாள கவிதைகளுக்கான பிரத்யேகமான ஒரு பத்திரிகை வெளியீட்டாளரான ஓ.எம். பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு (1899-1942), ரிக் வேதத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்த சமசுகிருத அறிஞரும், கதகளியின் நாடகமான ஸ்னபகா யோஹன்னனின் ஆசிரியருமான ஓ.எம்.சி நாராயணன் நம்பூதிரிப்பாடு (1910-1989) , பிரபல மலையாள கவிஞர் மற்றும் கேந்திரா சாகித்ய அகாடமி மற்றும் கேரள விருதுகள் உட்பட பல கௌரவங்களைப் பெற்ற ஒளப்பமண்ணா, என்று அழைக்கப்படும் எம். சுப்பிரமணியன் நம்பூதிரிப்பாடு (1923-2000) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். [7], ஓ.எம். அனுஜன் (1928–), கவிஞரும், கதகளி நிபுணரும், கல்வியாளருமான ஓ.எம். அனுஜன் (1928–) [8] சிறுவர் இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுமங்கலா என நன்கு அறியப்பட்ட லீலா நம்பூதிரிப்பாடு (1934–) [9],ஒளப்பமண்ணா குடும்பத்தின் சந்ததியில் வந்த பிரபல மனநல மருத்துவர் டாக்டர்.ஓ.என்.வாசுதேவன் (1940-2002) போன்றோரும் இங்கிருந்து வந்தவர்கள். [10] புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞரான செம்பை வைத்தியநாத பாகவதர் இந்த வீட்டில் கற்பித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த வீட்டைப் பற்றி என்.பி. விஜயகிருஷ்ணன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இது குடும்ப உறுப்பினர்களின் வரலாறு, கட்டிடக்கலை, சமூக-கலாச்சார பங்களிப்புகளை விவரிக்கிறது; இந்த புத்தகத்தில் ஞானபீட பரிசு பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய முன்னுரையும் இடம் பெற்றுள்ளது. [11]

இருப்பிடம்[தொகு]

இந்தக் கட்டிடம் ஒற்றப்பாலம்-மண்ணார்க்காடு சாலையில், வெள்ளிநேழியில், மாவுள்ளிபறம்பு அய்யப்பன் கோயிலுக்கு அருகில், அம்பாடி-பாறா சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஒற்றப்பாலம் புகைவண்டி நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் 57 கி.மீ தூரத்தில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமாகும் [4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Olappamanna Mana - ORT". www.responsibletourismindia.com. 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Dance, Drama and Magic At Olappamanna Mana". outlookindia.com/outlooktraveller/ (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. Manmadhan, Prema (2011-07-07). "Mana musings". The Hindu (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Olappamanna Mana, Vellinezhi, Cherplassery, Palakkad". Kerala Tourism (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The Treasure Chest of Cultural Patronage". webindia123.com (ஆங்கிலம்). 2019-04-18. 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Olappamannamana Heritage Home Palakkad - History". www.olappamannamana.com. 2019-04-18. 2018-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-17. 2019-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  8. Haridas, Anand (2012-08-12). "A life dedicated to classical art". The Hindu (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  9. M, Athira (2013-10-02). "The storyteller". The Hindu (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Personalities". www.olappamannamana.com. 2019-04-17. 2019-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-17 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  11. Kaladharan, V. (2016-08-18). "Glimpses of a glorious heritage". The Hindu (ஆங்கிலம்). 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளப்பமண்ணா_மனை&oldid=3547046" இருந்து மீள்விக்கப்பட்டது