சக்தன் தம்புரான் அரண்மனை
சக்தன் தம்புரான் அரண்மனை | |
---|---|
சக்தன் தம்புரான் அரண்மனையின் முகப்பு, திருச்சூர் நகரம் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கேரளம்-டச்சு பாணி |
நகரம் | திருச்சூர் நகரம் |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1795 |
கட்டுவித்தவர் | சக்தன் தம்புரான், கொச்சி இராச்சியம் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | கேரள பாணி நாலுகெட்டு வீடு |
சக்தன் தம்புரான் அரண்மனை (Shakthan Thampuran Palace) என்பது (இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது வடக்கேரா அரண்மனை என்றும் அழைக்கபடுகிறது. இது 1795 ஆம் ஆண்டில் கேரள-டச்சு பாணியில் புனரமைக்கப்பட்டது. இதன் முந்தைய இளவரசர் கொச்சியி மன்னன் ஒன்பதாம் இராமவர்மா தம்புரான் என்பராவார்.[1] அதே போல் சக்தன் தம்புரான் அரண்மனை (கொச்சின் வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர்) தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த அரண்மனை 2005 ஆம் ஆண்டில் மாநிலத்தால் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[2] [3] [4]
பாணி
[தொகு]சக்தன் தம்புரான் அரண்மனையின் முக்கிய கட்டமைப்பில் இரண்டு மாடிக் கட்டிடம் மற்றும் பாரம்பரிய கேரள பாணி நாலுகெட்டு வீடு உள்ளது. உயரமான கூரைகள், கூடுதல் தடிமனான சுவர்கள், விசாலமான அறைகள் மற்றும் நேர்த்தியாக மென்மையாக்கப்பட்ட இத்தாலிய பளிங்குகளால் கட்டப்பட்ட தளங்கள் இந்த அரண்மனையின் கட்டமைப்பு சிறப்புகளில் சில. அரண்மனையின் உட்புறங்கள், அதன் தனித்துவமான கட்டுமானத்தின் காரணமாக நிலவும் வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் வசதியான மற்றும் இனிமையான தங்குமிட நிலைமைகளை வழங்குகின்றன.
வரலாறு
[தொகு]சக்தன் தம்புரான் அரண்மனை ஒரு காலத்தில் கொச்சியின் ஆளும் வம்சமான பெரும்படப்பு சொரூபத்தை சேர்ந்தது. கி.பி 1790 மற்றும் 1805 க்கு இடையில் கொச்சியை ஆண்ட மன்னர் இராம வர்மா சக்தி தம்புரானின் அதிகார மையமாக இது இருந்தது. இவரது ஆட்சி கொச்சின் வம்சத்தின் பொற்காலமாக கருதப்பட்டது. இந்த அரண்மனை திருச்சூரில் வடக்குநாதன் கோயிலுக்கு அருகில் உள்ளது. திரிச்சூர் பூரம் திருவிழா, மே மாதத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவான பரமக்காவு பகவதி கோயில் மற்றும் திருவம்பாடி கிருட்டிணன் கோயில் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்குநாதன் கோயிலுக்கு முன்னால் யானைகள் அணிவகுத்து தாளம், முரசு, பட்டாசு போன்றவற்றைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இந்த அரண்மனை ஒரு காலத்தில் வடக்கெச்சிரா கோவிலகம் என்றும் அழைக்கப்பட்டது. மன்னர் இராம வர்மா சக்தி தம்புரான் அதை தற்போதைய வடிவத்தில் புதுப்பித்தார். திப்பு சுல்தானின் இராணுவத்தின் வருகை போன்ற சில முக்கியமான நிகழ்வுகளின் வரலாற்று எச்சங்களை அரண்மனை அதனுடன் கொண்டுள்ளது. இங்கு வசிக்கும் அரச குடும்பத்தின் கடைசி உறுப்பினர் சோவரயில் தீப்பேட்டா வல்லிய தம்புரானின் கொள்ளுப்பேரன் இராம வர்மா பரதன் தம்புரான் ஆவார். அரண்மனை வளாகத்தில் மிகவும் பழமையான சர்ப்பகாவு (புனித பாம்பு தோப்பு) ஒன்று உள்ளது. [2]
அருங்காட்சியகம்
[தொகு]இந்த அருங்காட்சியகத்தில் வெண்கல காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் 12 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான காலத்தைச் சேர்ந்த வெண்கலச் சிலைகளைக் காணலாம். 9 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கருங்கல் சிலைகளை காட்சிப்படுத்தும் சிற்பக் கண்காட்சி, பழங்கால நாணயங்களை முறையாக காட்சிப்படுத்தும் நாணயவியல் கண்காட்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் முன்னர் மாகாணமாக இருந்த கொச்சி மற்றும் அண்டை இராச்சியங்களில் புழக்கத்தில் இருந்தன. இவை அண்டை இராச்சியங்கள் மற்றும் கொச்சி வம்சத்தின் சில மைல்கற்களை சித்தரிக்கும் வரலாற்று காட்சியகங்கள் மற்றும் கல்வெட்டியல் காட்சியகங்கள் ஆகியவை பண்டைய எழுத்துக்களின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை வெளிப்படுத்துகின்றன. அரண்மனையில் உள்ள மற்ற ஆர்வமுள்ள காட்சியகங்களாக கொச்சியின் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் வெண்கலம் மற்றும் செப்பால் செய்யப்பட்ட வீட்டுப் பாத்திரங்களுக்கான தொகுப்பு; மற்றும் பெருங்கற்காலத்தின் எச்சங்களை காட்சிப்படுத்தும் ஒரு காட்சியகத்தையும் கொண்டுள்ளது. [2]
இங்கு கி.மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் உள்ளன. (ஈயல் பூச்சுக்களுடன்) திருவிதாங்கூர் பூர்வீக நாணயங்கள் (வெள்ளி), வீரராயன்கள் (தங்க நாணயங்கள்) ஒட்ட புத்தான் மற்றும் கொச்சி மன்னர்களால் வழங்கப்பட்ட இரட்டை புத்தான் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தைக் குறிக்கின்றன. இங்குள்ள நாணயங்களை அளவிடும் நாணய பலகை தனித்துவமானது. கேரளத்தில் திப்பு சுல்தானின் சிறிதுகால ஆட்சியில் வெளியிடப்பட்ட நாணயங்கள், இந்தோ-டச்சு நாணயங்கள், மலபார் நாணயங்கள் ( பிரெஞ்சுக்காரர்களால் வெளியிடப்பட்டது) மற்றும் பிரித்தானிய இந்தியாவின் நாணயங்கள் ஆகியவை கேரள வரலாற்றின் வெவ்வேறு காலங்களை சுட்டிக்காட்டுகின்றன. [5]
சர்ப்ப தோப்பு
[தொகு]நாகராஜன் (பாம்புகளின் அரசன்) மற்றும் பிற பாம்பு தெய்வங்கள் போன்ற பாம்பு கடவுள்களை வணங்குவதற்காக கட்டப்பட்ட பாம்பு ஆலயம் சர்ப்ப தோப்பு அல்லது சர்ப்ப காவு ஆகும். இது அரச குடும்பத்திற்கு செழிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது. பாம்பு கடவுள்களைப் மகிழ்வூட்ட அவ்வப்போது பிரார்த்தனை செய்யவும் பாம்புகளுக்கு பால் ஊற்றும் சடங்கு நேரங்களில் தவிர, இந்த இடங்களில் மனிதர் செல்வது இல்லை.
இந்த பாம்பு தோப்பில் வழிபடும் பாம்பு தெய்வங்கள் நாகராஜன் மற்றும் நாகயாக்சி ஆகும். அவை அரண்மனை தோட்டத்தில் அமைந்துள்ளன. அவை ஏழிலைப்பாலை மரத்தின் கீழ் காணப்படுகின்றன.
-
பாம்பு தோப்பின் முன் பார்வை
-
ஒரு ஏழிலைப்பாலை மரத்தின் கீழ் நாகராஜன்
-
ஏழிலைப்பாலை மரத்தின் கீழ் நாகயாக்சி
சக்தன் அரண்மனையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தோட்டம், கேரளாவின் சில பாரம்பரிய தாவரங்கள் மற்றும் மரங்களை காட்சிப்படுத்தவும் பாதுகாக்கவும் சமீபத்தில் அமைக்கப்பட்டது. அரண்மனையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் தோட்டத்தில், திருச்சூரின் புறநகரில் இருந்து மீட்கப்பட்ட கற்காலத்தின் சேகரிப்புகள் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sakthan Palace". thrissur.gov.in. Archived from the original on 2020-01-02. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
- ↑ 2.0 2.1 2.2 "Shakthan Thampuran Palace". Kerala Tourism. Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Page from the past" இம் மூலத்தில் இருந்து 2006-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060708155725/http://www.hindu.com/mag/2006/07/02/stories/2006070200360700.htm.
- ↑ "Shakthan Thampuran Palace | Kerala Tourism". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.
- ↑ "Page from the past". Chennai, India: The Hindu. 2 July 2006 இம் மூலத்தில் இருந்து 2006-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060708155725/http://www.hindu.com/mag/2006/07/02/stories/2006070200360700.htm. பார்த்த நாள்: 2010-09-20.