எடக்கல் குகைகள்

ஆள்கூறுகள்: 11°37′28.81″N 76°14′8.88″E / 11.6246694°N 76.2358000°E / 11.6246694; 76.2358000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடக்கல் குகைகள்
ഇടക്കൽ ഗുഹകൾ
Edakkal Caves
Edakkal Caves
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எடக்கல் குகைகளின் அமைவிடம்
இருப்பிடம்கேரள மாநிலத்தின் வயநாடு
பகுதிஇந்தியா
ஆயத்தொலைகள்11°37′28.81″N 76°14′8.88″E / 11.6246694°N 76.2358000°E / 11.6246694; 76.2358000
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 4 ஆயிரம் - கிமு 1700

எடக்கல் குகைகள் (Edakkal Caves) (மலையாளம்: ഇടക്കൽ ഗുഹകൾ), இந்தியாவின் கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பெட்டா நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் மேற்கு தொடர்மலையில், எடக்கல் எனுமிடத்தில், கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில், கிமு 4,000 ஆயிரமாண்டுகளுக்கு முன் அமைந்த இரண்டு இயற்கையான குகைகள் ஆகும். [1][2]இக்குகைப் பகுதிகளில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்துள்ளது.[3] தென்னிந்தியாவின் கற்காலத்திய ஒரே பாறை ஓவியம் எடக்கல்லில் கண்டெடுக்கப்பட்டதாகும். [4]எடக்கல் குகைகள், கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலமாக உள்ளது. [5]

எடக்கல் குகைகள்[தொகு]

தொழில்நுட்ப வரையறையின்படி எடக்கல்லில் இருப்பன குகைகள் அல்ல எனினும், பாறைப் பிளவுகளால் ஆன இரண்டடுக்கு கொண்ட இக்குகையின் கீழடுக்கு 18 நீளம், 12 அடி அகலம், 18 உயரம் கொண்டது. மேலடுக்கு 96 அடி நீளம், 22 அடி அகலம், 18 அடி உயரம் கொண்டது. இக்குகைச் சுவர்களில் கிமு 10,000 முதல் கிமு 5,000 வரையான காலப்பகுதிகளில் வரையப்பட்ட மனிதர்கள், விலங்குகள் மற்றும் வேட்டைக் கருவிகளின் பாறைச் செதுக்கல்களைக் கொண்டு, இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனித குடியிருப்புகள் இருந்தன என அறிய முடிகிறது.[6]

மூன்று வகையான இப்பாறைப் பிளவுகள் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகும். எடக்கல் குகைகளில் மனிதர்கள் வரலாற்றில் வேறுபாட்ட காலப் பகுதிகளில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.[7]

பிரித்தானிய இந்தியாவின் மலபார் பகுதிகளில்1890-இல் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பிரட் பாவ்செட் என்பவர் எடக்கல் குகைகளைக் கண்டுபிடித்தார்.[8]

எடக்கல் பாறை ஓவியங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-17.
  2. Protecting megaliths to keep history alive The Hindu daily
  3. "Archaeologists rock solid behind Edakkal Cave". The Hindu (Chennai, India). 2007-10-28 இம் மூலத்தில் இருந்து 2007-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071029212550/http://www.hindu.com/2007/10/28/stories/2007102851830300.htm. 
  4. "Edakkal Caves". Wayanad.nic. Archived from the original on May 29, 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
  5. EDAKKAL CAVES, WAYANAD
  6. "Edakkal Cave". Kerala gov. Archived from the original on 2007-04-03. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
  7. "Edakkal Caves". Edakkal Caves Website. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
  8. "Throwing new light on Edakkal Caves". Chennai, India: The Hindu. 2006-04-06 இம் மூலத்தில் இருந்து 2007-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071109150447/http://www.hindu.com/2006/04/06/stories/2006040602020200.htm. பார்த்த நாள்: 2007-04-07. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edakkal Caves
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடக்கல்_குகைகள்&oldid=3586325" இலிருந்து மீள்விக்கப்பட்டது