கடம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடம்பர் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் கதம்பர்[1] என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர்.

கடம்பர் கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. பாணன் பறையன் துடியன் கடம்பன் எனும் நால் வகை குடிகளில் ஒன்றாக கடம்ப இனம் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்பு-மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான்.[2] கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு. மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Chopra P.N., Ravindran T.K., Subrahmanian N. (2003), History of South India (Ancient, Medieval and Modern), Part 1, Chand publications, New Delhi ISBN 81-219-0153-7
  2. பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய், வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நார் அரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாதன் பதிற்றுப்பத்து 11-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பர்&oldid=2696435" இருந்து மீள்விக்கப்பட்டது