குருவா தீவு
உள்ளூர் பெயர்: குருவதீப் | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வயனாட்டு மாவட்டம், கேரளம் |
ஆள்கூறுகள் | 11°49′18″N 76°5′32″E / 11.82167°N 76.09222°E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | கபினி ஆறு |
பரப்பளவு | 3.84451 km2 (1.48437 sq mi) |
நிர்வாகம் | |
குருவா தீவு (Kuruvadweep) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது மானந்தவாடிக்கு கிழக்கே 17 கி.மீ. தொலைவிலும், சுல்தான் பத்தேரிக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தீவு கர்நாடக மாநில எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது மக்கள் வசிக்காத தீவாகும். இந்தத்தீவு கபினி ஆற்றுக்கு நடுவே 950 ஏக்கர் பரப்பில் பச்சைப் பசேலென்ற காடுகளுடன் பரவியுள்ளது. இந்த தீவுக்கு அரிய பல பறவைகள் வலசை வருகின்றன. இங்கு பல அரிய மூலிகைகள் உள்ளன. இந்த தீவை சுற்றறிப்பார்க்க குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகும்.[1] அதன் தனித்துவமான புவியியல் பண்புகள் இலைகளை மட்டுமல்ல, மௌனத்தையும் பசுமையான இடமாக மாற்றுகின்றன. சமீபத்தில், உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக இது பெயரிடப்பட்டுள்ளது.
நீரோடைகளாலும் நதிகளாலும் சூழப்பட்டுள்ள இத்தீவை கேரள சுற்றுலாத்துறை நடத்தும் கண்ணாடி இழை படகுகள் மூலம் அணுகலாம். காடுகளை பாதுகாக்கும் முயற்சியாக தீவுக்கான நுழைவு கேரள வனத்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திசம்பர் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் பிற்பகுதி வரை இத்தீவை பார்வையிட சிறந்த காலமகும். இத்தீவு வழக்கமாக மழைக்காலம் காரணமாக மே முதல் திசம்பர் தொடக்கம் வரை பொதுமக்களுக்கு மூடப்படும். இங்கு பெய்யும் மழை நீரோடைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து நீர் மட்டம் ஆபத்தான அளவுக்கு உயர்கிறது.
படக்காட்சியகம்[தொகு]
-
-
-
தட்டான்
வெளி இணைப்புகள்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200814180035/https://wayanadtourism.org/kuruva-islands/.