படிஞ்சரேசிரா
படிஞ்சரேசிரா | |
---|---|
![]() படிஞ்சரேசிரா குளத்தின் ஒரு தோற்றம் | |
அமைவிடம் | கேரளம், திருச்சூர் நகரம் |
வகை | செயற்கைக் குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | திருச்சூர் |
படிஞ்சரேசிரா (மலையாளம் :പടിഞ്ഞാറെ ചിറ) என்பது இந்தியாவின், கேரளத்தின், திரிசூர் நகரில் உள்ள நான்கு பழமையான குளங்களில் ஒன்றாகும். இது கொச்சியின் மன்னரான சக்தி தம்புரன் (1751-1805) என்பவரால் கட்டப்பட்டது மேலும் இது திரிசூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகும். இது வடக்கே மடத்துக்குச் சொந்தமானது.
வரலாறு[தொகு]
கொச்சி மன்னர் சக்தன் தம்புரான், தனது ஆட்சியில் நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன நோக்கத்திற்காக திருச்சூர் நகரில் நான்கு குளங்களை வெட்டினார். அவை வடகீச்சிரா, படிஞ்சேசிரா, தெக்கேசிரா, கிழக்கேசிரா ஆகும். [1] இவற்றில், பிந்தைய இரண்டு குளங்கள் அழிவுற்றன.
குறிப்புகள்[தொகு]
- ↑ "SAKTHAN THAMPURAN AND THE EMERGENCE OF COCHIN AS A COMMERCIAL CENTRE" (PDF). Saritha Viswanathan. 3 February 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-07-11 அன்று பார்க்கப்பட்டது.