மறையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மறையூர்
மறையூர்
இருப்பிடம்: மறையூர்
, கேரளா , இந்தியா
அமைவிடம் 10°09′N 77°07′E / 10.15°N 77.11°E / 10.15; 77.11ஆள்கூற்று: 10°09′N 77°07′E / 10.15°N 77.11°E / 10.15; 77.11
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி மறையூர்
மக்கள் தொகை

அடர்த்தி

20,575 (2001)

91/km2 (236/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 224.99 square kilometres (86.87 சது மை)


மறையூர் என்பது, தென்னிந்திய மாநிலமான கேரளாவின், இடுக்கி மாவட்டத்திலுள்ள ஒரு பெயர் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஒரு இடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டைப் பாதை வழியாக மூணாரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் மறையூர் அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன. 1991 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மறையூரின் மக்கள் தொகை 9,590 ஆகும்.

பெயர்[தொகு]

மறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

மலைகள் நிறைந்த பகுதியாகையால் மலையூர் என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், மறவூர், மறையூர் ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

மறையூரின் அமைவிடம்
மறையாறு

மேற்கோள்கள்[தொகு]

[:மறையூர் பயணங்கள் ]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறையூர்&oldid=2611634" இருந்து மீள்விக்கப்பட்டது