இலஞ்சிதார மேளம்
இலஞ்சித்தார மேளம் (மலையாளம் : ഇലഞ്ഞിത്തറമേളം) என்பது கேரளத்தின், திருச்சூர் பூரத்தின் போது திருச்சூர் நகரில் உள்ள வடக்குநாதன் கோயிலின் முற்றத்தில் உள்ள இலஞ்சி (வகுளம்) மரத்திற்கு அருகில் இசைக்கும் மேளக் கலைஞர்ர்களின் கச்சேரியாகும். இது கேரள பாரம்பரிய இசையின் சிறந்த தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மேலும் வேறு எந்த பூரம் விழாக்களைவிட மேளக் கலைஞர்கள் மிகுதியாக்க் கூடும் இடம் இதுவாகும். தொழில்நுட்ப துல்லியம் மற்றும் கருவி ஒழுக்கம் கொண்ட மேளத்திற்கு பாண்டி மேளம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். [1] [2] [3]
மேளம்[தொகு]
பரமெக்காவு பாகவதி கோயிலின் பாண்டி மேளம் இளஞ்சித்தார மேளம் என்று அழைக்கப்படுகிறது . மேள நிகழ்வானது மதியம் 2.30 மணியளவில் வடக்குநாதன் கோயிலில் உள்ள இலஞ்சித்தாரவில் தொடங்கி தொடர்ச்சியாக நான்கு மணிநேரம்வரை செல்கிறது. பாண்டி மேளத்தின் அடிப்படையானது திரிபுடா தாளம் ஆகும். மேளத்தில் பங்கேற்கும் கருவிகளின் எண்ணிக்கை 222 ஆகும். என்றாலும் 250 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இதன் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு காரணங்களால் கூடியிருப்பார்கள். மேள நிகழ்வில் 100 செண்டைகள் (இடந்தாளம் மற்றும் வலந்தாளம் பிரிவுகளில்), 75 இலத்தாளங்கள் 21 கொம்புகள் மற்றும் 21 கருங்குழல்கள் என ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கருவிகளின் எண்ணிக்கை ஆகும். பஞ்சாரி, சம்பா, செம்படா, அடந்தா, அஞ்சண்டதா, துருவம், பாண்டி என 7 வகைக மேளங்கள் உள்ளன. இலஞ்சித்தரா மேளத்தில் நிகழ்த்தபடும் தாளமானது ஆடந்த தாளம் (14 அக்ஷரங்கள்) ஆகும். [4] [5] [6] [7] [8]
இலஞ்சித்தார மேளத்தின் தலைவர்கள் (பிரமணிகள்)[தொகு]
பெருவனம் குட்டன் மரார் தற்போதைய இலஞ்சித்தார மேளத்தின் தலைவராக உள்ளார். இவர் 1977 இல் பரமேக்காவு பாகவதி கோயில் இசை அணியில் சேர்ந்தார், பின்னர் 1999 இல் அதன் தலைவரானார். 18 ஆண்டுகளாக தலைவராக இருந்த இவர் 35 ஆண்டுகளாக இலஞ்சித்தார மேளத்துடன் தொடர்பு கொண்டிருப்பவராக உள்ளார். மற்றொரு மூத்த தாளவாதியான குழூர் நாராயண மராரும் பரமேக்காவு இசை அணியில் 41 ஆண்டுகள் இருந்தார். அவர் 12 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். [9] [10]
தலைவர்கள்[தொகு]
- பாண்டாரதில் ஈச்சர மரார் - 1940 கள்
- பெருவனம் நாராயண மரார்
- பெருவனம் அப்பு மரார் - 1960 கள்
- திரிபெக்குளம் அச்சுத மரார்
- பல்லாவூர் அப்பு மரார்
- பெருவனம் குட்டன் மரார் (1999-)
குறிப்புகள்[தொகு]
- ↑ "A feast to the ears of percussion lovers". 2011-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ilanjithara Melam drums up high excitement". 2008-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "DRUMMING up excitement". 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ilanjithara melam attracts hundreds". 2008-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lakhs witness Thrissur Pooram". 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ilanjithara Melam". Department of Tourism, Government of Kerala. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Melam artistes should not play to the gallery: Peruvanam". 2013-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Peruvanam to pep up Pandimelam". 2008-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A feast to the ears of percussion lovers". 2013-04-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kuzhoor Narayana Marar passes away". 2013-04-17 அன்று பார்க்கப்பட்டது.