உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரை மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரை மாளிகை, திருவனந்தபுரம், கேரளம்
குதிரைச் சிற்பங்களின் தோற்றம்

குதிரை மாளிகை என்பது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனை. இது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மாளிகையில் கூரைப்பகுதிக்குக் கீழே குதிரை சிற்பங்கள் அமைந்திருப்பதால் குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு புத்தென் மாளிகை என்று மற்றொரு பெயரும் உண்டு.

எண்பது அறைகள் கொண்ட இம்மாளிகையில் 20 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு திருவாங்கூர் அரசுக்கு சொந்தமான வாள் முதலிய படைக்கலன்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள், மர வேலைப்பாடுள்ள பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள அறைகளின் கூரைப்பகுதியில் மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாளிகையிலிருந்து கோவிலைப் பார்க்கும் வகையிலான மாடம் ஒன்றும் உள்ளது.

1840களில் கட்டப்பட்ட இந்த மாளிகை 150 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. 1991-இல் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_மாளிகை&oldid=4014175" இலிருந்து மீள்விக்கப்பட்டது