கண்ணூர் கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 11°51′37.9″N 75°21′21.3″E / 11.860528°N 75.355917°E / 11.860528; 75.355917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணூர் கலங்கரை விளக்கம்
புதிய கலங்கரை விளக்கம் 25 சூலை 1976 அன்று பயன்பாட்டுக்கு வந்தது
கண்ணூர் கலங்கரை விளக்கம் is located in கேரளம்
கண்ணூர் கலங்கரை விளக்கம்
கேரளம்
அமைவிடம்இந்தியா, கேரளம்,
கண்ணூருக்கு அருகில்
ஆள்கூற்று11°51′37.9″N 75°21′21.3″E / 11.860528°N 75.355917°E / 11.860528; 75.355917
கட்டப்பட்டது1903 (முதலில்)
ஒளியூட்டப்பட்டது1976 (மாற்றம்)
கட்டுமானம்உருளை கோபுரம்
கோபுர வடிவம்மாடம் மற்றும் சிறிய விளக்கு கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புசிவப்பு கோபுரத்தில் ஒரு வெள்ளை பட்டை, விளக்கு மாடம்
உயரம்23 மீட்டர்கள் (75 அடி)
குவிய உயரம்35 மீட்டர்கள் (115 அடி)
ஆரம்ப வில்லைType C sealed beam lamp
தற்போதைய வில்லைType D sealed beam lamp
வீச்சு18.8 கடல் மைல்கள் (34.8 km; 21.6 mi)[1]
சிறப்பியல்புகள்Fl W 10s.
Admiralty எண்F0672
NGA எண்27668
ARLHS எண்IND-079[2]

கண்ணூர் கலங்கரை விளக்கம் (மலையாளம் :കണ്ണൂർ വിളക്കുമാടം) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில், கண்ணூர் நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேயம்பலம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கல்ங்கரை விளக்கமாகும். இது கடல் காட்சி பூங்கா மற்றும் அரசு விருந்தினர் மாளிகையை ஒட்டியுள்ளது. கலங்கரை விளக்கம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது இது அரேபிக் கடலை நோக்கியபடி உள்ளது.

கண்ணனூர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கண்ணூர் அழைக்கபட்டது. கண்ணூரில் உள்ள கலங்கரை விளக்கம் இன்னமும் கண்ணனூர் கலங்கரை விளக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

வரலாறு[தொகு]

கண்ணனூர் (இப்போது கண்ணூர் ) 15 ஆம் நூற்றாண்டின் வடக்கு மலபார், கோலாத்திரிகள் மற்றும் ஆரக்கல் இராச்சிய ஆட்சியாளர்களின் கீழ் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது. இந்த துறைமுகத்திலிருந்து மதராஸ், கொழும்பு, தூத்துக்குடி, அலெப்பி, மங்களூர், பம்பாய், கராச்சி போன்ற துறைமுகங்களுடன் கடல் வழித் தொடர்புகளைக் கொண்டிருந்தது.

வாஸ்கோ ட காமா தலைமையிலான போர்த்துகீசியர்கள் முதன்முதலில் 1498 இல் காப்பாடு கடற்கரையில் வந்து இறங்கினர். அவர்கள் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்ணூரில் புனித ஏஞ்சலோ கோட்டையைக் கட்டினர். ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அவர் 19 ஆம் நூற்றாண்டில் கண்ணனூரில் ஒரு படையினர் நகரத்தை நிறுவினார்.

1902 ஆம் ஆண்டில், மதராஸ் இராசதானி அரசின் துறைமுக அதிகாரி ரூ. 3430 / - செலவில் கோட்டையின் மேல் ஒரு கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்த கல் கலங்கரை விளக்கத்தின் பணி 1903 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் கலங்கரை விளக்கமும், கோட்டையின் ஒரு பகுதியும் கடலால் கொள்ளபட்டது. இதற்குப் பிறகு, கோட்டையில் கலங்கரை விளக்கின் விளக்கை ஏற்ற கோட்டையின் உள்ளே ஒரு கொடிகம்பம் நிறுவப்பட்டது.

தரையில் இருந்து கடலில் உள்ள கப்பல்களை சமிக்ஞைகளை அளிக்கும் பொருட்டு, 1843 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் எண்ணெய் விளக்கு ஏற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் கோட்டையில் ஒரு பீடம் கட்டப்பட்டது. மேலும் 4 வது ஆர்டர் உள்ளே வில்லை லென்சுக்குள் இரட்டை எண்ணெய் விளக்கு மற்றும் மறைபொருளுக்கான ஏற்பாடு கொண்ட விளக்கு ஆகியவை இந்த பீடத்தில் வைக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மே வரையிலான பருவங்களில் மட்டுமே ஒளி கிடைத்தது.

1924 இல், சில மேம்பாடுகள் செய்யப்பட்டன. 1939 ஆம் ஆண்டில் கோட்டையின் வடக்கு கொத்தலத்தில் அமைக்கப்பட்ட 16 மீட்டர் எஃகு தாங்குபடலுக்கு விளக்கு மாற்றப்பட்டது. எஃகு தாங்குபடலை இன்றும் கோட்டையில் காணலாம்.

1948 ஆம் ஆண்டில் டிஏ வாயுவில் இயங்கும் 10 விநாடிகள் ஒளிரும் உபகரணங்களாக மாற்றப்பட்டன. 1975-76 காலப்பகுதியில் தற்போதைய இடத்தில் புதிய கலங்கரை விளக்க கோபுரம் கட்டப்படும் வரை இந்த விளக்கு செயல்பாட்டில் இருந்தது.

இன்று[தொகு]

இன்று, ஒளி நவீன வோல்ட்டு, 30 வாட் வகை 'சி' சீல் செய்யப்பட்ட பீம் விளக்குகளுடன் நவீன பிஆர்பி -42 கருவிகளைப் பயன்படுத்துகிறது, இதை கல்கத்தாவின் மெஸ்ஸர்ஸ் ஜே. ஸ்டோன் இந்தியா வழங்கியது. கலங்கரை விளக்கத்தில் நிறுவப்பட்ட ஜி.ஐ விளக்கு மாடம் 2.4 மீட்டர் விட்டம் கொண்டது மற்றும் கொச்சியில் உருவாக்கபட்டது. புதிய கலங்கரை விளக்கம் 25 ஜூலை 1976 இல் பயன்பாட்டுக்கு வந்தது.

31 மே 2003 இல், 'சி' வகை சீல் செய்யப்பட்ட பீம் விளக்குகளுக்கு பதில் 'டி' வகை சீல் செய்யப்பட்ட பீம் விளக்குகளாக மாற்றப்பட்டன. இன்று கலங்கரை விளக்கம் ஒவ்வொரு இரவும் வானத்தை ஒளிரச் செய்கிறது, மேலும் பேபி கடற்கரையிலிருந்து மற்றும் பயம்பளம் வரை காணக்கூடிய தனி ஒளியை வழங்குகிறது.

படவரிசை[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Kannur lighthouse பரணிடப்பட்டது 11 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் Directorate General of Lighthouses and Lightships
  2. Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]