பூமலை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூமலை அணை
Poomala Image0165.jpg
அணையின் ஒரு தோற்றறம்
அதிகாரபூர்வ பெயர்Poomala Dam
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர், பூமலை
புவியியல் ஆள்கூற்று10°35′59″N 76°14′41″E / 10.5998°N 76.2448°E / 10.5998; 76.2448ஆள்கூறுகள்: 10°35′59″N 76°14′41″E / 10.5998°N 76.2448°E / 10.5998; 76.2448
திறந்தது1968
இயக்குனர்(கள்)சிறு நீர்பாசனத் துறை, கேரளம்

பூமலை அணை (Poomala Dam) என்பது நீர்பாசன நோக்கத்துக்காக கட்டபட்ட ஒரு அணை ஆகும். இந்த அணை இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புழக்கல் தொகுதிக்கு உட்பட்ட முலங்குண்ணாதுகவு பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு அணையும், சுற்றுலா தலமுமாகும்.[1] [2]

வரலாறும், வசதிகளும்[தொகு]

1939 ஆம் ஆண்டில் பூமலை பள்ளத்தாக்கில் முன்னதாக ஒரு சிற்றணை கட்டப்பட்டது, 1968 இல் பூமலை நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கபட்டது. மண் மற்றும் கற்களால் கட்டபட்ட இந்த அணையானது கேரள சிறு நீர்ப்பாசனத் துறையால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. பூமலை அணையை ஒரு சுற்றுலா மையம் என்று உத்தியோகபூர்வமான உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணனால் 21 மார்ச் 2010 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 94.50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே மற்றொரு அணையான, பதசகுண்டு உள்ளது, அது தற்போது நீர்ப்பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் படகு சவாரி, குதிரை சவாரி, 600 மீட்டர் நடைபாதை; 300 பேர் அமரத்தக்க ஒரு சமுதாயக் கூடம்; ஒரு சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறை வசதிகள் போன்றவை உள்ளன. [3] [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமலை_அணை&oldid=3038123" இருந்து மீள்விக்கப்பட்டது