கொல்லம் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல்லம் வானூர்தி நிலையம்
കൊല്ലം വിമാനനിലയം
ஐஏடிஏ: இல்லைஐசிஏஓ: இல்லை
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் சென்னை மாகாணம் (1932 வரை)
இயக்குனர் கேரள பொதுப்பணித் துறை
சேவை புரிவது கொல்லம்
அமைவிடம் ஆசிரமம், கொல்லம்
ஆள்கூறுகள் 8°53′38″N 76°35′35″E / 8.894°N 76.593°E / 8.894; 76.593ஆள்கூறுகள்: 8°53′38″N 76°35′35″E / 8.894°N 76.593°E / 8.894; 76.593
நிலப்படம்

Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Kollam" does not exist.Location in Kollam, India

கொல்லம் வானூர்தி நிலையம் (Quilon Aerodrome) என்பது தென்னிந்தியாவின் முந்தைய திருவிதாங்கூர் நாடும், இன்றைய கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும் . [1] 1920 களில், சென்னை மகாணத்தை பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் கொச்சின், திருவிதாங்கூர் மற்றும் மலபார் மாவட்டங்களில் குடிமை சமூகத்திற்கான வேறு வானூர்தி நிலையங்கள் இல்லை என்ற நிலை இருந்தது. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு தெற்கே 1932 ஆம் ஆண்டில் சமஸ்தான தலைநகருக்கு 57 கிலோமீட்டர்கள் (35 mi) தெற்கே, உருவாக்கபட்டது. இது ஆசிரமம் மைதானம் என்று அறியப்பட்டது.

வானூர்தியின் தரையிறங்கும் பகுதி அருகிலுள்ள மலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்புரைக்கற்றகளால் பலப்படுத்தப்பட்டது, ஏனெனில் அங்கு ஏற்னவே இருந்த தளர்வான மண் வானூர்தி நிலையத்திற்ககுப் பொருந்தாது. வானூர்தி நிலையத்தில் கட்டிடங்கள் எதுவும் இல்லை, இருப்பினும், நிறுத்தப்படும் விமானங்களுக்கான வட்ட கான்கிரீட் திண்டு கட்டப்பட்டது. வானூர்தி நிலையம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. வானூர்தி நிலையம் பயிற்சிகளுக்ககும் பயன்படுத்தப்பட்டது. வானூர்தி நிலையத்ததின் எல்லையில் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட விபத்தானது, விமானி மற்றும் பயிற்சிபெற்றவரின் மரணத்திற்கு காரணமாக ஆனாதால் இவை நிறுத்தப்பட்டன.[2]

பழைய வானூர்தி நிலையத்தில் வானூர்தி பயிற்சி பள்ளிக்கான திட்டம்[தொகு]

2009 -2012 காலப்பகுதியில், உள்ளூர் அதிகாரிகள் வானூர்தி பயிற்சி பள்ளிக்காக வானூர்தி நிலையத்தைப் புதுப்பிக்க திட்டமிட்டனர். [3] இலகுரக விமானங்களுக்காக 4,000 அடி ஓடுபாதை. இருக்கிறது என்றாலும், இந்த தளத்தைச் சுற்றி இப்போது கட்டிடங்கள் மற்றும் செல்பசி கோபுரங்கள் போன்ற பல உயரமான கட்டமைப்புகளால் சூழப்பட்டிருப்பதாலும், இந்த திட்டத்துக்கு உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபனைகள் தோன்றியதாலும், திட்டம் நிராகரிக்கப்பட்டது. [4]

வான்வழித் திட்டங்களின் மறுமலர்ச்சி[தொகு]

கேரள அரசு அஸ்ராம் பழைய வானூர்தி நிலைய பகுதி உட்பட 10 வான்வழிப் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இது தொடர்பாக பிப்ரவரி 2020 அன்று மாநில அரசு இந்திய சிவில் விமான அமைச்சகத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. [5] [6] [7] [8]

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]