விழிஞ்ஞம் குகைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழிஞ்ஞம் குகைக் கோயில்
விழிஞ்ஞம் குகைக் கோயில்
அமைவிடம்கேரளம், திருவனந்தபுரம்
விழிஞ்ஞம் குகைக் கோயில் is located in இந்தியா
விழிஞ்ஞம் குகைக் கோயில்
Location in Kerala, India

விழிஞ்ஞம் குகைக் கோயில் (Vizhinjam Cave Temple) என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞத்தில் கிபி. 8 ஆம் நூற்றாண்டு கால இந்து கோவில் ஆகும். [1]

குகையில் ஒரே கல்லலில் செதுக்கபட்ட வீணா தட்சிணாமூர்த்தியின் ஒரு சிற்பத்தை உள்ளடக்கிய சன்னதி உள்ளது. குகையின் வெளிப்புறச் சுவரில் இடதுபுறத்தில் சிவனின் திரிபுராந்தகர் சிற்பமும், வலதுபுறத்தில் பார்வதியுடன் நடராசர் சிற்பமும் உள்ளது. மேலும் முடிக்கப்படாத பல்லவ துவாரபாலகர்கள் சிற்பமும் உள்ளன.[1]

இந்தக் கோயிலானது திருவனந்தபுரம் நகர மையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கேரளத்தின் தெற்குப் பகுதிகளை ஆண்ட ஆய் மன்னர்களின் தலைநகராக விழிஞ்ஞம் இருந்தது.

பட தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Krairiksh, Piriya. "A NOTE ON THE ‘MAKARA’ BALUSTRADE AT MALACCA." Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 47, no. 1 (225), 1974, pp. 96–103.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழிஞ்ஞம்_குகைக்_கோயில்&oldid=3178930" இலிருந்து மீள்விக்கப்பட்டது