அரிப்பாறை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிப்பாரா அருவி

அரிபறை அருவி அல்லது அரிப்பரா அருவி (மலையாளம் : അരിപ്പാറ) என்பது கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில், திருவம்பாடி நகருக்கு அருகிலுள்ள அனக்கம்பாயில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். [1] இது திருவம்பாடி - அனக்கம்பாயில் பாதையில்  திருவம்பாடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவி இரவஞ்சிப்புழாவின் துணை ஆறாகும். அரிப்பாறை அருவியில் நீர் மின் நிலைய திட்டத்தை செயல்படுத்தும் ஒரு திட்டம் உள்ளது. [2]

போக்குவரத்து[தொகு]

அரிபரா அருவியின் மேற்கில் உள்ள கோழிக்கோடு நகரம் கிழக்கில் தாமரசேரி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 கோழிக்கோடு வழியாக செல்கிறது இது வடக்கில் கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைக்கிறது. ஆதிவாரம் வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை எண் .54 கல்பற்றா, மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைகிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு . அருகிலுள்ள தொடருந்து நிலையம் கோழிக்கோட்டில் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

அரிப்பாரா அருவி
  1. "Tourism project for Thiruvambadi". The Hindu. 17 August 2006. Archived from the original on 2007-01-03. https://web.archive.org/web/20070103193336/http://www.hindu.com/2006/08/17/stories/2006081711170300.htm. பார்த்த நாள்: 2009-06-26. 
  2. "Aripara hydel project likely in two years". The Hindu. 28 September 2007. Archived from the original on 2008-09-21. https://web.archive.org/web/20080921134306/http://www.hindu.com/2007/09/28/stories/2007092851390300.htm. பார்த்த நாள்: 2009-06-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிப்பாறை_அருவி&oldid=3260879" இருந்து மீள்விக்கப்பட்டது