கொல்லம் பூரம்
கொல்லம் பூரம் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | கொல்லம் பூரம் |
வகை | கோயில் திருவிழா |
அனுசரிப்புகள் | கோயில் திருவிழா, குட மாட்டம், இளஞ்சித்ரமேளம், யானை அணிவகுப்பு |
கொல்லம் பூரம் (Kollam Pooram, மலையாளம்: കൊല്ലം പൂരം) என்பது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் கொண்டாடப்படும் ஒரு கோயில் திருவிழா ஆகும். மாநிலம் முழுவதிலுமிருந்து பெருவாரியான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். கொல்லம் ஆசிரமத் திடலில் [1] உள்ள கிருட்டிணசுவாமி ஆலய ஆசிரமத்தின் ஆண்டுத்திருவிழாவாக கொல்லம் பூரம் கொண்டாடப்படுகிறது. தற்போது இத்திருவிழா, ஒரு தேசியத் திருவிழாவாக கருதப்பட்டு நாடெங்கிலுமுள்ள மக்களை கொல்லம் நகரை நோக்கி ஈர்த்துள்ளது.
விழாவில் குடமாட்டம் நிகழ்விற்காக 30 யானைகள், பதினைந்துப் பதினைந்து யானைகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒரு குழு தாமரைக்குளம் சிறீ மகாகணபதி ஆலயத்தின் சார்பாகவும் மற்றொரு குழு புதியகாவு பகவதி ஆலயம் சார்பாகவும் பங்கேற்கும். வண்ணவண்ணக் குடைகளுடன் நிகழும் இக்குடமாட்ட நிகழ்வு பாரம்பரிய மேள இசையுடன் நடைபெறுகிறது [2]. இதைத் தொடர்ந்து கண்ணைக் கவரும் வான வேடிக்கை பெரிய அளவில் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kollam Pooram today". தி இந்து. 15 April 2005. Archived from the original on 28 ஜூலை 2016. https://archive.today/20160728063941/http://www.thehindu.com/2005/04/15/stories/2005041511910300.htm. பார்த்த நாள்: 6 August 2015.
- ↑ "Kollam Pooram draws huge crowds". தி இந்து. 17 April 2015. http://www.thehindu.com/news/national/kerala/kollam-pooram-draws-huge-crowds/article7111750.ece. பார்த்த நாள்: 6 August 2015.