மச்சாட் மாமாங்கம்
மச்சாட் மாமாங்கம் | |
---|---|
![]() மாமங்கத்தில் மரக் குதிரைகள் | |
அதிகாரப்பூர்வ பெயர் | Machad Mamangam |
கடைபிடிப்போர் | மலையாளிகள் குறிப்பாக இந்துக்கள் |
வகை | கோயில் திருவிழா |
அனுசரிப்புகள் | கோயில் திருவிழா |
நாள் | கும்பம் (பிப்ரவரி) மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மரக் குதிரையுடன் (குதிரா வேலா) திருவிழா முதல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அடுத்தநாள் விழா நிறைவடைகிறது. |
2020 இல் நாள் | 17 பெப்ரவரி 2020 |
ஆள்கூறுகள்: 10°38′08.9″N 76°15′35.3″E / 10.635806°N 76.259806°E மச்சாட் மாமாங்கம் ( மலையாளம் : മച്ചാട് മാമാഗ്ഗം) மேலும் மச்சாட் குதிரை வேலா அல்லது திருவணிக்காவு குதிரை வேலா என அழைக்கப்படுவது கேரளத்தின், திருச்சூர் மாவட்டம், வடக்காஞ்சேரிக்கு அருகில் உள்ள திருவணிக்காவு கோயில் நடக்கும் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவானது ஐந்து தேசங்களால் (கிராமங்கள்) போட்டி முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. கருமாத்ரா, விருப்பக்கா, மங்கலம், பர்லிக்காடு, மணலிதாரா ஆகியவை இந்த விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய 5 கிராமங்கள். தெக்கும்காரா, புன்னம்பரம்பு, பனங்காட்டுக்கரா ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரம் நடத்துவதில் முன்முயற்சி எடுக்கும் தேசங்கள் ஆகும். மலையாள நாட்காட்டியின்படி கும்பத்தின் முதல் வெள்ளிக்கிழமை பரபுரப்புடன் விழா தொடங்குகிறது. அடுத்து வரவிருக்கும் செவ்வாயன்று உண்மையான திருவிழாவான வேலா அன்று வெவ்வேறு தேசங்களால் செய்யப்பட்ட மரக் குதிரைகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
நாட்டார் நம்பிக்கையின் படி, அந்த பகுதியை ஆண்ட மன்னர் யானை திருவிழாவான உத்திராளிக்காவு பூரத்துக்கு போட்டியாக உண்மையான குதிரைகளைக் கொண்டு திருவிழாவை நடத்த விரும்பினார். ஆனால் கேரளத்தில் குதிரைகள் இல்லாததாலும், குதிரைகளை வளர்க்க இயலாமல் இருந்ததால் அவர் அந்த விருப்பத்தை கைவிட்டு செயற்கை குதிரைகளுடன் கொண்டாடத் தொடங்கினார். [1] [2] [3] [4]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Machad Mamangam brings alive rural charm". The Hindu.
- ↑ "Machad Mamangam, festival with a difference". The Hindu.
- ↑ "Machad Mamankam held". The New Indian Express.
- ↑ "Thrissur celebrates mamangam". Times of India.