பறம்பிக்குளம் அணைக்கட்டு
பரம்பிக்குளம் அணை Parambikulam Dam | |
---|---|
பரம்பிக்குளம் பகுதி | |
நாடு | India |
அமைவிடம் | கேரளம் |
புவியியல் ஆள்கூற்று | 10°22′40″N 76°45′51″E / 10.37778°N 76.76417°E |
உரிமையாளர்(கள்) | கேரளம்[1][2] |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு[1][2] |
அணையும் வழிகாலும் | |
வகை | தடுப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | பறம்பிக்குளம் ஆறு |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 69,165,000 m3 (56,073 acre⋅ft) |
பரம்பிக்குளம் அணை (Parambikulam Dam) இது இந்திய நாட்டின் கேரளம் மாநிலத்தின் பாலகாடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பறம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை (Embankment dam) ஆகும். மேலும் 2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் அதிக அளவிலான நீர் தேக்கம் கொண்ட அணைக்கட்டுகளில் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் முதல் பத்து அணைக்கட்டுகளின் பட்டியலிலும் இடம் பெறுவதாகும்.
இந்த அணையானது தமிழக முதல்வராக இருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்டது. இதன் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு கவனித்துக்கொண்டாலும் இந்த அணையின் உரிமையை கேரள அரசுக்கு சொந்தம் கொண்டாடுகிறது. தமிழ்நாடும் கேரளாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இங்கிருந்து ஆண்டுக்கு 7.25 டி எம் சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோதிலும் தமிழ் நாடு அரசு தண்ணீரை ஒருபோதும் திறந்துவிடுவதில்லை. இந்த நிகழ்வு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதியிலிருந்து நடந்துவருகிறது. கேரளாவின் சிற்றூர் வட்டம் பகுதியில் பயிரிடப்படும் ஆயிரக்கணக்கான நிலங்களுக்கே தண்ணீர் போதவில்லை என்று கேரளா அறிவிக்கிறது. 2006 ஆம் ஆண்டு சூலை மாதம் நடந்த ஒப்பந்த கூட்டத்தில் சரியான முடிவு எட்டப்படவில்லை. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது.