உள்ளடக்கத்துக்குச் செல்

புனித ரபேல் விருந்து, ஒல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ரபேல் விருந்து
வகைதேவாலய திருவிழா
நாள்23, 24 அக்டோபர்
அமைவிடம்(கள்)கேரளம், திருச்சூர், ஒல்லூர்
நிறுவல்1718
வருகைப்பதிவு1,00,000 மேலே
புரவலர்கள்Saint Anthony's
வலைத்தளம்
[1]

புனித ரபேல் விருந்து அல்லது மலகாயுடு பெருநாள் விருந்து (Feast of Saint Raphael அல்லது Malakhayude Perunnal ) என்பது 1839 ஆம் ஆண்டு முதல் கேரளத்தின் (இந்தியா) திருசூருக்கு அருகிலுள்ள ஒல்லூரில் நடைபெறும் ஆண்டு விழாவாகும். இதில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கலந்துகொள்கின்றனர்.[1] 1718 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றும் புனித அந்தோனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒல்லூர் ஃபோரேன் தேவாலயம், புகழ்பெற்ற ரபேல் ஆர்க்காங்கல் ஆலயத்தையும் கொண்டுள்ளது . [2] இது 18 ஆம் நூற்றாண்டின் கேரளாவில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த திருவிழா கேரளத்தின் மிக முக்கியமான கிறிஸ்தவ விழாக்களில் ஒன்றாகும். விழாவின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் தேவாலய வளாகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் விழா தொடங்குகிறது. [3] கேரள சுற்றுலா துறை பட்டியலிட்ட அரை டசன் கிறிஸ்தவ விழாக்களில் இதுவும் ஒன்றாகும். [4]

அக்டோபர் 23 ஆம் தேதி ஒல்லூர் திருச்சபையின் ஆறு மண்டலங்களிலிருந்து வரும் வளா (வளையல்) ஊர்வலம் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும். இந்த வளா ஊர்வலமானது தேவாலயத்தின் பாறை சிலுவையின் அடிவாரத்தில் முடிவடையும். ஊர்வலத்தில் பளபளக்கும் தேர், முத்துக்குடைகள் (பல வண்ண பட்டுக் குடைகள்), பல வகையான வாத்தியங்கள் மற்றும் மேளங்கள் இடம் பெறும். மேலும் தேவாலய மைதானத்தில் நடக்கும் வாண வேடிக்கை காட்சிகள் போன்றவை மிகவும் கவர்ச்சிகரமானவை.

திருவிழாவின் முக்கிய பகுதி, ரூபக்கூட்டில் ( அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு போன்றது) நான்கு தேவதூதர்களான புனித ரபேல், புனித மிக்கேல், புனித கபிரியல், கார்டியன் ஏஞ்சல் ஆகியோரின் சிலைகளை சுமந்து செல்லும் முக்கிய ஊர்வலம் நடக்கும். முன்னர் துள்ளல் ("பிசாசு நடனம்" என்று பிரபலமாக அறியப்பட்டது) நடனமும் இதனுடன் இணைந்து நடந்துந்துவந்து, திருவிழாவின் இந்த அம்சம் மிக அண்மைய ஆண்டுகளில் திருச்சபையால் தடுக்கபட்டது. [5]

குறிப்புகள்

[தொகு]
  1. A. Sreedhara Menon, Social and Cultural History of Kerala (1979), p. 232.
  2. José Pereira, Baroque India: The Neo-Roman Religious Architecture of South Asia (2000), pp. 139-140.
  3. "Ollur Church Fete Begins on 23 October பரணிடப்பட்டது 2004-11-23 at the வந்தவழி இயந்திரம்" தி இந்து, 10 October 2004.
  4. Kerala Tourism பரணிடப்பட்டது 7 மார்ச்சு 2010 at the வந்தவழி இயந்திரம், accessed 29 Oct. 2009
  5. "Festival webpage". Archived from the original on 24 September 2008. பார்க்கப்பட்ட நாள் 29 October 2009.

வெளி இணைப்புகள்

[தொகு]