மிக்கேல் (அதிதூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிக்கேல்
அதிதூதர்
ஏற்கும் சபை/சமயங்கள்அங்கிலிக்கம், கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, போது மரபுவழி திருச்சபை, லூதரனியம், இசுலாம், யூதம்
திருவிழாநவம்பர் 8 (கிழக்கு மரபுவழித் திருச்சபையின் புதிய நாட்காட்டி) / நவம்பர் 21 (கிழக்கு மரபுவழித் திருச்சபையின் பழைய நாட்காட்டி), செப்டம்பர் 29 ("Michaelmas"); மே 8; மேலும் பல
சித்தரிக்கப்படும் வகைஅலகையை காலால் மிதித்தல்; கொடி, தராசு, வாள் ஏந்தியவாறு
பாதுகாவல்கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலர்;[1] கீவ், யூதர்களைப் பாதுகாப்பவர்,[2] காவலர்,[3] இராணுவ வீரர், காவலர், வியாபாரி, கடற்படையினர், வானிலிருந்து குதிக்கும் வீரர்[4]

மிக்கேல் (எபிரேயம்: מִיכָאֵל‎, ஒலிப்பு: மிக்காயேல், Micha'el அல்லது Mîkhā'ēl; கிரேக்க மொழி: Μιχαήλ, Mikhaḗl; இலத்தீன்: Michael, அரபு மொழி: ميخائيل‎, Mīkhā'īl, தமிழ்: சீர்திருத்தத் திருச்சபை: மிகாவேல்) எனப்படுவர் யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின் படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது.[5]

எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு கடவுளுக்கு நிகர் யார்? என்று பொருள்.

பழைய ஏற்பாட்டில் மிக்கேல்[தொகு]

பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இஸ்ரயேலின் பாதுகாப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் மிக்கேல்[தொகு]

வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )

7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். 8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

யூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது

9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.

குரானில் மிக்கேல்[தொகு]

மிக்கேல் (அரபு மொழி: ميخائيل, Mīkhā'īl) குரான்னில் குறிப்பிட பட்ட இரண்டு ஆதிதூதாதரில் ஒருவர் ஆவார். (மற்றவர் கிப்ரில் என்று அழைக்க பட்ட கபிரியேல்). குரானில் ஸுரா 2:98 இல் மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகிறது

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

சில இஸ்லாமியர் ஸுரா 11:69 இல் குறிப்பிடபட்டது போல், இப்ராஹிம் அவர்களை சந்தித்த மூன்று தூதரில் ஒருவர் என்று நம்புகிறார்கள்

உசாத்துணை[தொகு]

  1. Alban Butler, The Lives of the Fathers, Martyrs, and other Principal Saints. 12 vols. B. Dornin, 1821; p. 117
  2. "Bible gateway, Daniel 12:1". Biblegateway.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
  3. "St. Michael, Patron Saint of Police Officers". Jcpdes.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.
  4. "St. Michael, the Archangel - Saints & Angels - Catholic Online". Catholic.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-27.
  5. Jude 1:9
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்கேல்_(அதிதூதர்)&oldid=2731697" இலிருந்து மீள்விக்கப்பட்டது