வலைவாசல்:கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிறித்தவம் வலைவாசல்



கிறித்தவம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sermon on the Mount
Sermon on the Mount

கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். இது நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது படிப்பினைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் நம்புகின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக இது காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் யூத மதத்தின் நிறைவாக தன்னை கருதுவதால் யூத மதத்தின் புனித நூலை, பழைய ஏற்பாடு என்னும் பெயரில் கிறிஸ்தவ விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. யூதம் மற்றும் இசுலாம் சமயங்களைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய சமயமாகும்.

தொகு  

சிறப்புக்கட்டுரை


பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.




தொகு  

பகுப்புகள்


கிறித்தவ பகுப்புகள்

கிறித்தவம் பகுப்பு காணப்படவில்லை
தொகு  

கிறித்தவ நபர்கள்


அசிசியின் புனித பிரான்சிசு (1182–1226) ஒரு கிறித்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இவர் திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் குருப்பட்டம் பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வு கொண்டு அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை. பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா நகருக்கு எதிராக அசிசி நகர் போர் தொடுத்தபோது, இருபது வயதே நிறைந்த இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவறச் சபையைத் தொடங்கினார்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


  • ...விவிலிய சிலுவைப் பாதை என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும்
  • ...இந்திய கத்தோலிக்க திருச்சபை இந்திய நாட்டுக்கே உரிய சிறப்புக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய நாள்காட்டியை பயன்படுத்துகின்றது
  • ...எஸ்தாக்கியார் நாடகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற புனித எஸ்தாக்கியாரின் (படம்) வரலாற்றை எடுத்துக் கூறுகின்ற நாடகம் ஆகும்.
  • ...திருத்தந்தையின் மறைவாலோ, அல்லது பணித்துறப்பாலோ ஆட்சிபீடம் காலியாகும் போது புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும்.
தொகு  

விவிலிய வசனங்கள்


வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/ஏப்பிரல்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • கிறித்தவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கிறித்தவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கிறித்தவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கிறித்தவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

இதே மாதத்தில்


தொகு  

சிறப்புப் படம்


மீட்பரான கிறிஸ்து சிலை
மீட்பரான கிறிஸ்து சிலை
படிம உதவி: Artyominc

மீட்பரான கிறித்து பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக இது கருதப்படுகின்றது. இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.


கிறித்தவம் தொடர்பானவை


தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கிறித்தவம்&oldid=2295471" இலிருந்து மீள்விக்கப்பட்டது