உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது வலைவாசல்:கிறித்தவம்-ல் தோன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விவிலிய வசனங்கள் காப்பகம் ஆகும்:


வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/சனவரி


ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார்.
-எசாயா 40:31



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/பெப்ரவரி


எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்.
1 பேதுரு 4:8



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/மார்ச்


கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
- பிலிப்பியர் 2:6-11



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/ஏப்ரல்


இயேசு, "வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்றார்.
- யோவான் 14:6

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/மே


சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.
- திருப்பாடல்கள் 34:10



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/சூன்


எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
- 1 தெசலோனிக்கர் 5 :16-18

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/சூலை


நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக!
- 2 தெசலோனிக்கர் 1: 11



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/ஆகத்து


தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை - இயேசு
- யோவான் 15:13

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/செப்டெம்பர்


சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
- 1 கொரிந்தியர் 1:18



வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/அக்டோபர்


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது.
- எபிரேயர் 4:12

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/நவம்பர்


ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம். ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்: தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும். ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார். ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.
- 1 கொரிந்தியர் 3:11-15

வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/திசம்பர்


தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
- யோவான் 3:16