தென்னிந்தியத் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியத் திருச்சபை
(Church of South India)
தென் இந்திய திருச்சபையின் முத்திரை.
வகைப்பாடு பிராட்டஸ்டன்ட்
இறையியல் ஆங்கிலிக்கம்
குமுகம் எபிஸ்கோபல்
நெறியாளர் பிரதமப் பேராயர் ஆபிரகாம் உமன்
(Abraham Oomen)
சங்கங்கள் ஆங்கிலிக்க ஒன்றியம்,
திருச்சபைகளின் உலக மன்றம்,
சீர்திருத்த சபைகளின் உலகக் கூட்டணி,
ஆசியாவின் கிறித்தவ இணையம்,
இந்தியத் திருச்சபைகளின் ஒன்றியம்,
இந்தியத் திருச்சபைகளின் தேசிய மன்றம்
புவியியல் பிரதேசம் ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, தமிழ் நாடு, மற்றும், இலங்கை.
ஆரம்பம் செப்டம்பர் 27 1947
சென்னை, தமிழ் நாடு
Merge of ஆங்கிலிக்கன், பிராட்டஸ்டன்ட், மெதடிசம், பிரிஸ்பிட்டேரியன், மற்றும், பாப்டிஸ்ட்
பிரார்த்தனைக் கூட்டங்கள் 14,000 [1]
உறுப்பினர்கள் நான்கு மில்லியன்[1]
மறை பரப்புனர்கள் 1,214 [2]
மருத்துவமனைகள் 104 [1]
உயர்நிலைப் பள்ளிகள் 2000 பள்ளிகள், 130 கல்லூரிகள்

தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது.

இயேசு, தம்மை ஏற்று நம்பிக்கை கொள்கின்ற மக்களிடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்தி உரைத்த கீழ்வரும் சொற்கள் தென்னிந்தியத் திருச்சபை உருவாவதற்கு உந்துதலாக அமைந்தன:

"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபையின் விருதுவாக்காகவும் உள்ளது.

வரலாறு[தொகு]

தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிஷனெரி சங்கம் (LMS), மதுரை அமெரிக்கன் மிஷன், மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஷன் சபை, போன்றவைகள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய ஜக்கியச் சபை - (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தன.

இந்த அமைப்பு மற்ற இந்திய புரோட்டஸ்தாந்து திருச்சபைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், அச்சபைகளுடன் தொடர்பு கொண்டு அவற்றையும் தென்னிந்திய ஜக்கியச் சபையில் இணைப்பதற்காக தரங்கம்பாடியில் 1919 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிலும். அதற்குப் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் பெரும்பங்கேற்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர் பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா. தமிழ்நாட்டில் பிறந்த இவர் ஆங்கிலிக்கன் சபையின் முதல் இந்தியப் பேராயராக 1912, திசம்பர் 29இல் திருநிலைப்பாடு பெற்று, புதிதாக நிறுவப்பட்ட தோர்ணக்கல் மாவட்டப் பேராயராக நியமனம் பெற்றிருந்தார்.

தென் இந்திய திருச்சபை பிரார்த்தனைகள் மற்றும் விவாதங்கள் இருபத்தெட்டு ஆண்டுகளின் விளைவாக, அதன் பயனாக 1920 தில் ஆங்கிலேக்கன் சபைகள் இதணுடன் இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். பின்பு இவர்களைத் தொடர்ந்து 1925தில் மெதடிஸ்ட் சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947லில் தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்ற மாபெரும் அமைப்பு உதயமானது. இந்த அமைப்பு 1947 - செப்டம்பர் 27 ஆம் நாள் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இது தென் இந்தியத் திருச்சபை தொடக்க செயல்பாட்டின் தலைமையில் திருவாங்கூர் மற்றும் கொச்சி மறை மாவட்டத்தில் பேராயராக மரியாதைக்குரிய (Rt Revd) சி.கே ஜேக்கப் என்பவர் ஆயராக பொறுப்பேற்றார்.

தென் இந்திய திருச்சபை திறப்பு விழா, தேவாலயங்களில் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து. இது ஒரு கூட்டமைப்பு குருபரிபாலன அல்லாத தேவாலயங்களில் இடையே உணரப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக. இந்த கூட்டமைப்பு நான்கு மரபுகள் அதாவது, ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), புரட்டாஸ்டன்ட், பிரிஸ்பைடீரியன், மற்றும் மெத்தடிஸ்ட், ஒன்றாக இனைந்தது. அப்போது தென்னிந்தியத் திருச்சபை பதினான்கு தேவாலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இன்று இருபத்தி இரண்டு தேவாலயத்தில், எட்டு தமிழ் நாட்டிலும், ஆந்திர பிரதேசத்தில் ஆறு, கேரளம் நான்கு, கர்நாடகம் மூன்று, மற்றும் இலங்கை ஒன்றும் உள்ளது. மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைத் தன்னகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த தென்னிந்தியத் திருச்சபையின் ஐக்கியத்தில், ஆர்காட் லூத்தரன் திருச்சபை (ALC), தமிழ் நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் திருச்சபை (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு திருச்சபை, இரட்சணிய சேனை திருச்சபை (Salvation Army), பெந்தேகோஸ்தே திருச்சபை, போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

முத்திரை[தொகு]

தென்னிந்தியத் திருச்சபையின் முத்திரை

தென்னிந்தியத் திருச்சபையின் முத்திரை (லோகோ) இந்திய பாரம்பரியத்தை நினைவுறுத்தும் வகையில் தாமரையோடு இணைந்த சிலுவையுடன் காணப்படுகிறது. ( That they all may be one ) என்ற வசனத்தை நினைவு கூறும் வாக்கியமும் இதில் காணப்படுகிறது. இது கடவுள் மற்றும் மக்களின் ஒற்றுமை வெளிப்பாடு ஆகும். ஒரு வெண்மையின் பின்னணியில் உண்மையான நிறங்கள், சிவப்பு (வாழ்க்கையையும்) மற்றும் ஊதா (பக்தி மற்றும் சமயத்திற்கு) ஒரு இணைபிரியா தோழமை கடவுள் மற்றும் மனிதர் இடையே உள்ள விசித்திரமான ஒற்றுமையை விளக்குகின்றது. மேலும் தாமரை மற்றும் சிலுவை யை சுற்றி ஒரு வட்டவடிவத்தில் பொன்மொழி மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் (Church of South India) என்ற பெயர் வார்த்தைகள் சித்தரிக்கப்பட்டது.

அமைப்புகள்[தொகு]

மதக்குருக்கள்[தொகு]

மறைமாவட்டங்கள்[தொகு]

உலகம் முழுவதும் 3.8 மில்லியன் உறுப்பினர்கள், 14,000 உள்ளூர் பிராத்தனைக் கூடங்கள் உள்ளது. உறுப்பினர்கள் பெரும்பாலான இந்தியவிலும் அதேவேளை, இலங்கை, அமெரிக்க ஜக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா, பக்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளனர். மேலும் தென்னிந்தியத் திருச்சபை உறுப்பினர்கள் புது தில்லி, கொல்கத்தா,போப்பால், பிலாய், மும்பை, புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றனர்.

தென்னிந்தியத் திருச்சபையானது தென் இந்தியா மற்றும் இலங்கை மொத்தம் 22 மறைமாவட்டங்கள் உள்ளது. அவைகள் கீழ் உள்ள பட்டியலில் அடங்கியுள்ளது:

பெயர் தலைமையகம் இடம் ஆயர் இணைப்பு
டோர்னக்கல் மறைமாவட்டம் டோர்னக்கல் ஆந்திரப் பிரதேசம் பி. சத்யானந்தம் தேவமணி [3]
கரீம்நகர் மறைமாவட்டம் கரீம்நகர் பி. சூர்யா பிரகாஷ் [8]
கிருஷ்ணா-கோதாவரி மறைமாவட்டம் மஜிலிப்பட்டினம் ஜி. தேவ்வசிர்வாதம் [9]
மேடக் மறைமாவட்டம் செக்கந்தராபாத் டி. எஸ். கனக பிரசாத் [4]
நான்டயல் மறைமாவட்டம் நான்டயல் பி. ஜே. லாரன்ஸ் [10] பரணிடப்பட்டது 2010-01-06 at the வந்தவழி இயந்திரம்
ராயலசீமா மறைமாவட்டம் கடப்பா கோ. பி. ஏசுவரப்பிரஸ்சாத் [11] பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம்
மத்திய கர்நாடகம் மறைமாவட்டம் பெங்களூர் கர்நாடகம் சுபுதர்ரப்பா வசந்த குமார் [5]
கர்நாடகம் வடக்கு மறைமாவட்டம் தர்வத் ஜே. பிரபாகரா ராவ் [12]
கர்நாடகம் தெற்கு மறைமாவட்டம் மங்களூர் ஜான் எஸ். சதானந்தா [13] பரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம்
கிழக்கு கேரளா மறைமாவட்டம் மேலூகாவுமாட்டும் கேரளம் கே. ஜி. டேனியல் [6]
மத்திய கேரளம் மறைமாவட்டம் கோட்டயம் தாமஸ் கே. ஓமான் [14]
வட கேரளம் மறைமாவட்டம் சொரானூர் கே. பி. குருவிலா [15]
தெற்கு கேரளம் மறைமாவட்டம் திருவனந்தபுரம் ஏ. தர்மராஜ் ராசாலம் [16]
கோயம்புத்தூர் மறைமாவட்டம் கோயம்புத்தூர் தமிழ் நாடு தற்போது ஆயர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது [7]
கன்னியாக் குமரி மறைமாவட்டம் நாகர்கோவில் ஜி. தேவகடசம் [8]
மதுரை மறைமாவட்டம் சென்னை வி. தேவசகாயம் [9]
மதுரை-ராம்நாடு மறைமாவட்டம் மதுரை ஏ. கிறிஸ்டோபர் ஆசிர் [10]
தூத்துக்குடி - நாசரேத்து மறைமாவட்டம் தூத்துக்குடி ஜே. ஏ. டி. ஜெபசந்திரன் [11]
திருநெல்வேலி மறைமாவட்டம் திருநெல்வேலி ஜே. ஜே. கிருஸ்துதாஸ் [12]
திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் திருச்சிராப்பள்ளி ஜி. பால் வசந்தக்குமார் [13]
வேலூர் மறைமாவட்டம் வேலூர் Rt. Rev.Dr. ஏ. ராஜவேலு [14]பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம்
தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டம் யாழ்ப்பாணம் இலங்கை டேனியல் தியாகராஜா [15]

நிறுவனங்கள்[தொகு]

இந்த சபையின் தலைமையில் 2000 பள்ளிகள், 130 கல்லூரிகள், மற்றும் தென் இந்தியாவில் 104 மருத்துவமனைகள் இயங்குகின்றது. 1960 ஆம் ஆண்டு தேவாலய அதன் சமூக பொறுப்பு உணர்வு மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை தொடங்கியது. இந்தியா முழுவதும் 50 க்கும் மேல்பட்ட திட்டங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொத்தம் 35,000 பேர், மற்றும் 500 குடியிருப்பு விடுதிகள், இன்னும் 50 பயிற்சி மையங்கள், உள்ளன. மேலும் தென்னிந்தியத் திருச்சபையின் தெற்கு கேரளம் மாவட்டமான திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. மேலும் தலித் மற்றும் ஆதிவாசி சமூதாயத்தினர் நல வாழ்வு திட்டங்கள், பள்ளிக் கூடங்கள், பிராத்தனைக் கூடங்கள். சமூகங்களின் தேவைகளுக்கு பரிமாறுதல் என ஒரு குறிப்பிட்ட உதவிகளை இந்த அமைப்பு ஏற்றுக் கொள்கிறது.

இறையியல் கல்வி[தொகு]

இந்த தேவாலயத்தின் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் "செனட் ஆஃப் செராம்பூர் கல்லூரி", என்ற இறையியல் கல்வி வாரியம் இணைக்கப்பெற்ற நிறுவனங்கள் வழங்கப்படும் இறையியல் பட்டங்கள் அங்கீகரிக்கிறது.

இவைகள் பின்வருமாறு:

*. கேரளா ஐக்கிய இறையியல் பள்ளி (KUTS), திருவனந்தபுரம்.
*. ஆந்திர கிரிஸ்துவர் இறையியல் கல்லூரி (ACTC), ஜதராபாத்
*. ஆயர்கள் கல்லூரி (B.C.), கொல்கத்தா.
*. குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (GLTCRI), சென்னை.
*. கர்நாடகம் இறையியல் கல்லூரி (KTC), மங்களூர்.
*. தென் ஆசியா இறையியல் ஆராய்ச்சி நிறுவனம் (SATHRI), பெங்களூரு.
*. செராம்பூர் கல்லூரி (SC), செராம்பூர்.
*. தமிழ் நாடு இறையியல் பள்ளி (TTS), மதுரை.
*. ஐக்கிய இறையியல் கல்லூரி (UTC), பெங்களூரு.
*. கர்நாடகம் இறையியல் கல்லூரி (KTC), மங்களூர்.

படத்தொகுப்புகள்[தொகு]

ஆதாரம்[தொகு]