வலைவாசல்:விவிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


விவிலியம் வலைவாசல்


Tamil Bible - Thiruviviliam.jpg


விவிலியம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Bibel-1.jpg
Gutenberg Bible.jpg

விவிலியம் (புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதனை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும்....

தொகு  

சிறப்புக்கட்டுரை இற்றைப்படுத்து


எம்மாவு
எம்மாவு (Emmaus) என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. இந்நகரம் கிரேக்க மொழியில் Ἐμμαούς என்றும், இலத்தீனில் Emmaus என்றும், எபிரேயத்தில் חמת‎ (Hammat) என்றும், அரபியில் عِمواس‎ (Imwas) என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்.

லூக்கா நற்செய்தி 24:13-35 என்னும் பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் வருகின்ற எம்மாவு என்னும் நகரம் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பாக, 1 மக்கபேயர் 3:55-4:22 என்னும் பாடத்தைக் காட்டலாம். கி.மு. 166ஆம் ஆண்டளவில் யூத மக்கள் கிரேக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அப்போது யூதா மக்கபேயு என்பவரின் தலைமையில் அவர்கள் செலூக்கிய கொடுங்கோலாட்சியை எம்மாவு நகரில் நிகழ்ந்த சண்டையில் முறியடித்தனர்.

பின்னர், செலூக்கிய தளபதி பாக்கிது என்பவர் எம்மாவு நகருக்குக் காப்புச் சுவர்கள் கட்டினார் (காண்க: 1 மக்கபேயர் 9:50). உரோமையரின் ஆட்சியின் கீழ் எம்மாவுக்குச் சிறிதளவு தன்னாட்சி இருந்தது. ஆனால் ஏரோது மன்னன் கி.மு. 4இல் இறந்ததைத் தொடர்ந்து எம்மாவு தீக்கிரையாக்கப்பட்டது. முதல் யூத கிளர்ச்சியின்போது (கி.பி. 660-70), எருசலேம் நகரை முற்றுகையிட்டு அழிப்பதற்கு முன் உரோமைப் படைகள் எம்மாவு நகரில் பாசறை அமைத்தன. கி.பி. 221இல் எலகாபலுஸ் மன்னன் காலத்தில் எம்மாவு நகரின் பெயர் "நிக்கோபொலிஸ்" என்று மாற்றப்பட்டது. "பெருநகர்" நிலைக்கு உயர்த்தப்பட்டது. கி.பி. 639இல் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது எம்மாவு நகரில் சுமார் 25,000 மக்கள் இறந்தார்களாம்.

தொகு  

பகுப்புகள்

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

தொகு  

விவிலிய வசனங்கள்


Ichthus.svg

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது.
- எபிரேயர் 4:12
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • விவிலியம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|விவிலியம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • விவிலியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • விவிலியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • விவிலியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • விவிலியம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
விவிலியம் தொடர்பானவை


தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:விவிலியம்&oldid=2295476" இருந்து மீள்விக்கப்பட்டது