வலைவாசல் பேச்சு:கிறித்தவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்தவம் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கிறித்தவம் நுழைவாயில் உருவாக்கல் பற்றி[தொகு]

மாதரசன், இதுவரை நுழைவாயில் (Portal) பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் உங்கள் செய்தி கண்டதும் ஆங்கில விக்கியிலும் பிற மொழி விக்கிகளிலும் (தமிழ் உட்பட) தேடிப்பார்த்தேன். தமிழில் "நுழைவாயில்:கிறித்தவம்" என உருவாக்குவதற்குப் போதிய கட்டுரைகள் உள்ளன என்றே நினைக்கிறேன். கணிணித் தொழில்நுட்பம் சிறிதே தெரிந்த என்னைவிட நீங்கள் இத்துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். எனவே, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம்: எவ்வாறு வடிவமைப்பது? தலைப்புகள் எவ்வாறு இடுவது? பிரிவுகள், உட்பிரிவுகள் எவ்வாறு அமைக்கலாம்? - இது போன்ற கருத்துகளை முதலில் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும். கிறித்தவமா கத்தோலிக்கமா என்று கேட்டால், முதலில் கிறித்தவம் என்று பரந்த அளவில் தொடங்குவதே நல்லது என நினைக்கிறேன்.--பவுல்-Paul 21:31, 22 ஏப்ரல் 2011 (UTC)

திரு. பவுல் அவர்களே, கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்.
  • நான் ஒருவருடத்திற்கும் குறைவாகவே விக்கியில் பங்களித்து வருகிறேன். ஆகவே இதனை செயல் படுத்த விக்கி நிர்வாகிகளாயிருக்கும் மூத்த உறுபினர்களின் ஆலோசனையும் உதவியும் தேவை. அதோடு கூட உங்களை போன்ற துறை வல்லுனர்களின் வழிகாட்டலும் மிக அவசியம்.
  • பிரிவுகள், உட்பிரிவுகளை பொருத்தவரை, முன்னரே இருக்கும் பகுப்புகளை முதலில் சரிசெய்து ஒருங்கிணைக்க வேண்டும். இப்பகுப்புகளைக் அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்களாம். காலப்போக்கில் கூடுதலாக சேர்க்கலாம்.
  • தேவையான கட்டுரைகள் என ஒரு தலைப்பின் கீழ் கிறித்தவம் தொடர்பான மிக அவசியமான, ஆனால் இதுவரை இல்லாத கட்டுரைகளை பட்டியலிடலாம்.
  • இந்நுழைவாயிலை அமைக்க முக்கிய காரணம், சிதருன்டு கிடக்கும் கிறித்தவம் தொடர்பாண பக்கங்களை ஒன்றிணைப்பதாகவும், இருக்கும் கட்டுரைகளுக்கு முகப்பாகவும் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
  • நுழைவாயில்:கிறித்தவம் என அமைத்துவிட்டு, அதன் உள் பகுப்பாக பகுப்பு:கத்தோலிக்கம் என பட்டியலிடலாம். (காண்: வலைவாசல்:தமிழ் -> தமிழர்)
--ஜெயரத்தின மாதரசன் 06:33, 25 ஏப்ரல் 2011 (UTC)

பவுல், மாதரசன் மற்றும் அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள். கிறித்தவம் தொடர்பான வலைவாசல் அமைப்பது குறித்து மகிழ்ச்சி. வலைவாசல்:கிறித்தவம் எனப் பெயரிட்டு முதலில் ஆரம்பியுங்கள். அதனை வளர்த்தெடுப்பதில் அனைத்துப் பயனர்களும் உதவுவார்கள். வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 06:48, 25 ஏப்ரல் 2011 (UTC)

திரு. Kanags அவர்களே, நீங்கள் கூறியபடியே செய்துள்ளேன். ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து திருத்தவும் --ஜெயரத்தின மாதரசன் 11:10, 25 ஏப்ரல் 2011 (UTC)

கிறித்தவம் வலைவாசல் பற்றிக் கருத்துப் பகிர்வு[தொகு]

  • Kanags, மாதரசன், வாழ்த்துக்கு நன்றி! மாதரசன் உருவாக்கிய வலைவாசலைப் பார்த்தேன். அதை மெருகூட்ட சில பரிந்துரைகள் இதோ:
  1. தலைப்பு "கிறித்தவம் வலைவாசல்" என்றிருந்தால் நல்லது. ("கிறித்தவ" என்பது உரிச்சொல் பொருள் தருவதால் இம்மாற்றம்).
  2. கிறித்தவம் வலைவாசல் செருமானிய மற்றும் பிரான்சிய விக்கிகளில் எவ்வவாறு உள்ளது என்று பார்த்தேன். அதன் அடிப்படையில் சில கருத்துகள்:
  3. "விவிலியம் வலைவாசல்" தனியாக உருவாக்குதல் நல்லது (காண்க: பிரான்சிய விக்கி). அதை "கிறித்தவம் வலைவாசலில்" மேற்பகுதியில் "தொடர்புடைய வலைவாசல்" (Related Portal) என்று கொடுக்கலாம். அந்த வலைவாசலில் கீழ்வரும் பிரிவுகள் கொடுக்கலாம்:
  • முதல் பக்க கட்டுரைகள்
  • விவிலியப் படிமம்
  • விவிலிய மையக் கருத்துகள்
  • உங்களுக்குத் தெரியுமா?
  • சிறப்புக் கட்டுரைகள்
  • விவிலிய வினா-விடை
  • பழைய ஏற்பாடு
  • புதிய ஏற்பாடு
  • விவிலிய மனிதர்கள்
  • விவிலிய மக்கள்
  • விவிலிய இடங்கள்
  • விவிலியப் பெயர்ப்புகள்
  • தமிழ் விவிலியம்
  • விக்கி மூலத்தில் விவிலிய நூல்கள்
  • விவிலியம் இணையத்தளங்கள்

4. "கிறித்தவம் வலைவாசலில்" கீழ்வரும் அமைப்பு பொருத்தமாய் இருக்கும் (காண்க: செருமானிய விக்கி):

  • முதன்மைக் கட்டுரைகள்
  • இன்றைய கட்டுரை
  • கிறித்தவம்: சபைப் பிரிவுகள்
  • விரிவாக்க வேண்டிய கட்டுரைகள்
  • இறையியல்
  • வரலாறு
  • வழிபாடும் திருநாட்களும்
  • நிறுவனமும் அமைப்பும்
  • துறவற சபைகள்
  • சமூகப் பணி
  • கலைகளும் பண்பாடும்
  • இந்தியாவில் கிறித்தவம்
  • தமிழுலகில் கிறித்தவம்

5. மேற்கூறிய பெரும் பிரிவுகளின்கீழ் உட்பிரிவுகள் மற்றும் தனிப் பதிவுகள் வரலாம்.
பணி தொடர்க!--பவுல்-Paul 17:53, 25 ஏப்ரல் 2011 (UTC)

புதிய வடிவம்[தொகு]

இந்த வலைவாசலுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கலாம் என எண்ணியுள்ளேன். அதன் மாதிரியை இங்கு பார்க்கலாம். அனைவருக்கும் ஏற்புடைய பட்சத்தில் அதே வடிவில், இந்த பக்கத்தை மாற்றலாம். திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அறியத்தாருங்கள். மாற்றலாம். --அராபத் (பேச்சு) 12:54, 25 ஏப்ரல் 2013 (UTC)

அருமையான வலைவாசல் அரபாத். எவருக்கும் ஆட்சேபனை இராதென்றே நினைக்கிறேன். மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 13:36, 25 ஏப்ரல் 2013 (UTC)
👍 விருப்பம் மிக நன்றாக உள்ளது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:26, 25 ஏப்ரல் 2013 (UTC)

வடிவமைப்பை தொடங்கிவிட்டேன்.தேர்ந்தெடுக்கப்பட்ட விவிலிய வசனங்கள் 10 தேவை. --அராபத் (பேச்சு) 08:56, 29 ஏப்ரல் 2013 (UTC)

வேலை முடிந்தது[தொகு]

வேலை முடிந்தது. இருப்பினும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டும்.

  • சிறப்புக் கட்டுரை, கிறித்துவ நபர்கள், சிறப்புப் படம் மற்றும் "இதே மாதத்தில்" ஆகியவை அனைத்தும் தமிழ் விக்கியில் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப் பட்டவைகளில் இருந்து மட்டுமே எடுத்தாண்டுள்ளேன்.
  • கிறித்துவ நபர்கள் மற்றும் சிறப்புப் படம் ஆகியவை இரண்டும் மிக குறைந்த அளவே கிடைத்துள்ளன.
  • விவிலிய வசனங்களில் ஒன்று குறைகிரது. தகுந்த வசனத்தை வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/சூலை பக்கத்தில் பதிந்து விடவும். வலைவாசல்:கிறித்தவம்/விவிலிய வசனங்கள்/மே-ல் உள்ள வசனம் யார் கூறியது என்பதும் தெரியவில்லை (எங்கள் பள்ளியின் சுற்றுச்சுவரில் படித்தது). தெரிந்தவர்கள் பதிந்து விடவும்.
  • "இதே மாதத்தில்" பகுதியில், அதிக தவல்கள் சேர்க்கப்பட வேண்டும். (ஒவ்வொரு மாதத்தின் கீழும் ஐந்து முக்கிய நிகழ்வுகள்)
  • "கிறித்தவம் தொடர்பானவை" பகுப்பின் கீழ் உள்ள எழுதப்படாத தலைப்புகள் விரைந்து எழுதப்பட வேண்டும்.
  • பவுல் அவர்கள், தலைப்பின் கீழ் இருக்கும் படிமத்தை மாற்றப் பரிந்துரைத்தார். அதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
  • இவை தவிற வேறு எதேனும் திருத்தம் இருந்தால் மற்றவர்களும் சுட்டிக்காட்டலாம். இனைந்தே முடிக்கலாம்.

நன்றி --அராபத் (பேச்சு) 06:07, 30 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் மணக்கட்டும்[தொகு]

மணக்கட்டும் தமிழ். வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:15, 1 மே 2013 (UTC)[பதிலளி]