உள்ளடக்கத்துக்குச் செல்

எழுபது சீடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுபது சீடர்களின் திருவோவியம்

எழுபது சீடர்கள் அல்லது எழுபத்திரண்டு சீடர்கள் (கிழக்கில் எழுபது திருத்தூதர்கள்) என்பவர்கள் லூக்கா நற்செய்தி 10:1–24இல் குறிக்கப்பட்டுள்ள இயேசு கிறித்துவின் எழுபது சீடர்கள் ஆவர். இந்த நற்செய்தியின் படி இவர்களை இயேசுவே நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். இவர்களின் எண்ணிக்கை சில முக்கிய விவிலிய கையெழுத்துப் படிகளில் எழுபது எனவும் பெரும்பாண்மையானவற்றில் எழுபத்திரண்டு எனவும் உள்ளது. புனித ஜெரோம் வுல்கேட் மொழிபெயர்ப்பின்போது எழுபத்திரண்டு என்றே மொழிபெயர்த்தார்.

மேற்கத்திய கிறித்தவம் இவர்களை சீடர்கள் என அழைத்தாலும்,[1] கிழக்கத்திய கிறித்தவத்தில் இவர்கள் திருத்தூதர்கள் என்றே அறியப்படுகின்றனர்.[2] விவிலிய மூலத்தில் இவர்கள் மறைபணியாற்ற அனுப்பப்பட்டவர்கள் என்னும் பொருள்படும் பதத்தால் அழைக்கப்படுகின்றனர். மேற்கு மற்றும் கிழக்கத்திய கிறித்தவ மரபுகள் திருத்தூதர்கள் மற்றும் சீடர் ஆகியப்பதங்களுக்கு வெவ்வேறு பொருள் கொள்கின்றன என்பது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Catholic Encyclopedia: Disciple: "The disciples, in this disciples, in this context, are not the crowds of believers who flocked around Christ, but a smaller body of His followers.
  2. Orthodox Church in America: Synaxis of the Seventy Apostles
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுபது_சீடர்கள்&oldid=1703597" இலிருந்து மீள்விக்கப்பட்டது