மகதலேனா மரியாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகதலா மரியா
சிலுவை அடியில் மகதலா மரியா
பிறப்பு தகவலில்லை
இறப்பு தகவலில்லை
எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்[1]
திருவிழா ஜூலை 22
சித்தரிக்கப்படும் வகை நறுமணத் தைலப் பெட்டி[2], நீளமான கூந்தல்
பாதுகாவல் மருந்து செய்து விற்பவர்; தியான வாழ்வு வாழ்பவர்; மனம்மாரியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர் இத்தாலியர் ;


மகதலாவின் மரியா (Mary of Magadala) அல்லது மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார்.[3] இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, Lu 8:2 Mk 16:9 கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.[4] மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் Mark 16:9 ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.[3] .

இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Saint Mary Magdalen". New Catholic Dictionary. (1910). அணுகப்பட்டது 2007-02-28. 
  2. Jones, Terry. "Mary Magdalen". Patron Saints Index. பார்த்த நாள் 2007-02-28.
  3. 3.0 3.1 "Saint Mary Magdalene." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. read online.
  4. Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதலேனா_மரியாள்&oldid=2213087" இருந்து மீள்விக்கப்பட்டது