தோமா (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருத்தூதர் புனித தோமா
Saint Thomas (Apostle)
"தோமாவின் ஐயம்"கரவாஜியோ
ஐயப்படும் தோமா
பிறப்பு ~ கிபி 1 (முற்பகுதி)
கலிலேயா
இறப்பு டிசம்பர் 21, 72-கிபி
சென்னை, இந்தியா(நம்பப்படுகிறது)
ஏற்கும் சபை/சமயம் எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் சென்னை சாந்தோம் தேவாலயம்
திருவிழா ஜூலை 3கத்தோலிக்கம்
அக்டோபர் 6 அல்லது ஜூன் 30கிழக்கு மரபு
உயிர்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது
சித்தரிக்கப்படும் வகை இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
பாதுகாவல் கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல


திருத்தூதர் புனித தோமா (அ) புனித தோமையார் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில்(அப்போஸ்தலர்) ஒருவர். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன. இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.

பெயரும் அடையாளமும்[தொகு]

பெயர் மரபு[தொகு]

இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன.[1] 'தோமா' என்னும் அரமேய மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.[2][3] இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.

இந்தியாவில் கிறிஸ்தவபணி[தொகு]

திருவிதாங்கோடு அரப்பள்ளி

இந்தியாவில் தோமையார் முதன் முதலில் பண்டைய சேர துறைமுகமான முசிறியில்(தற்போது கேரளாவிலுள்ள) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென்இந்தியாவின் கடற்கரை ஓரமாக நற்செய்தி பணியாற்றிய இவர் ஏழரை ஆலயங்களை நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம், நிரனம், நிலக்கல், கொல்லம், வேம்பார் மற்றும் திருவிதாங்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.[4]

இறப்பு[தொகு]

தோமையார் கி.பி 72-ல் சென்னை மயிலாப்பூரில் மரித்தார் என நம்பப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மார்கோ-போலோ குறிப்புப்படி சென்னை அருகே அம்புகளால் குத்தப்பட்டு இறந்தார். அவரது மீப்பொருட்கள் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளது.

விழா நாட்கள்[தொகு]

9ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமன் நாள்காட்டியில், புனித தோமாவின் விழா நாளாக டிசம்பர் 21ந்தேதி குறிக்கப்பட்டிருந்தது. 1969ஆம் ஆண்டு ரோமன் நள்காட்டி திருத்தி அமைக்கப்பட்டபோது புனித ஜெரோமின் மறைசாட்சிகள் நினைவுநாள் குறிப்பின் அடிப்படையில் திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 3ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான ஆங்கிலிக்கத் திருச்சபைகள் டிசம்பர் 21ந்தேதியே புனிதரின் விழாவை சிறப்பிக்கின்றன. கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் புனித தோமாவின் விழாவை அக்டோபர் 19ந்தேதி (ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 6) கொண்டாடுகின்றனர்.


குறிப்புகள்[தொகு]

  1. "மத்தேயு 10:3, "மாற்கு 3:18, "லூக்கா 6:15, "யோவான் 14:5
  2. "யோவான் 11:16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார்.
  3. "யோவான் 20:24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
  4. http://www.payyappilly.org/history/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமா_(திருத்தூதர்)&oldid=2240474" இருந்து மீள்விக்கப்பட்டது