மக்தலேனா தே பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்தலேனா தே பாசி
1878-ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பெற்ற Little Pictorial Lives of the Saints-என்னும் புத்தகத்திலிருந்து
கன்னியர்
பிறப்பு(1566-04-02)ஏப்ரல் 2, 1566
பிளாரன்சு, இத்தாலி
இறப்புமே 25, 1607(1607-05-25) (அகவை 41)
பிளாரன்சு, இத்தாலி
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்1626, உரோம் by எட்டாம் அர்பன்
புனிதர் பட்டம்ஏப்ரல் 28, 1669, உரோம் by பத்தாம் கிளமெண்ட்
திருவிழாமே 25; மே 29 (கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி 1728-1969)
பாதுகாவல்நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்)

புனித மரிய மக்தலேனா தே பாசி (ஏப்ரல் 2, 1566 – மே 25, 1607) என்பவர் ஒரு இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபைத் துறவியும், கிறித்தவ சித்தரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புனித மரிய மக்தலேனா தே பாசி, இத்தாலிய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, உயர் குடியும் (noble family), செல்வந்தருமாகிய பாசி (Pazzi) குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் திருமுழுக்கு பெயர் கத்ரினா என்பதாகும். இவர் தனது 12-ஆம் அகவையில், தன் தாயின் முன்நிலையில் முதல் பரவச நிலையை (ecstasy) அடைந்தார். இதன் பின் பல முறை இவ்வகையான அனுபவங்களைப் பெற்றார். தனது 14-ஆம் அகவையில் துறவற சபையில் சேர்ந்தாலும், அவரின் குடும்பத்தின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தின போதும், அவர்களது மனதை மாற்றி, தன் 16-ஆம் அகவையில் கர்மேல் சபையில் சேர்ந்து, மரிய மக்தலேனா என்னும் பெயரை, தன் துறவற பெயராகக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், கடும் தவமும், செபமும் செய்து வந்தார்.

புனிதர் பட்டமளிப்பு[தொகு]

இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆட்சியில் துவங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் ஆட்சியில் 1626-இல் வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால், ஏப்ரல் 28, 1669 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.

விழா நாள்[தொகு]

இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, 25 மே எனக்குறிக்கப்பட்டது. ஆனால் 1725-இல் அந்நாள் புனித திருத்தந்தை எட்டாம் கிரகோரிக்கு ஒதுக்கப்பட்டதால் 29 மே-க்கு நகர்த்தப்பட்டது. 1969-இல் நடந்த மாற்றத்தில் மீண்டும் 25 மே-க்கு நகர்த்தப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  • மக்தலேனா தே பாசியின் வாழ்க்கை வரலாறு (புத்தகம்) (ஆங்கிலம்)
  • மக்தலேனா தே பாசியைப்பற்றிய இணையதளங்கள் (ஆங்கிலம்)
  • "மக்தலேனா தே பாசி". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). 
  • "மக்தலேனா தே பாசி". Archived from the original on 2007-05-28. பார்க்கப்பட்ட நாள் 2007-05-24. (ஆங்கிலம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்தலேனா_தே_பாசி&oldid=3565908" இலிருந்து மீள்விக்கப்பட்டது