அந்தோனி மரிய கிளாரட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்தோனி மரிய கிளாரட்
Saint Anthony Mary Claret
(Antonio Maria Claret i Clarà)
புனித அந்தோனி மரிய கிளாரட்
அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையின் நிறுவனர்
பிறப்பு(1807-12-23)திசம்பர் 23, 1807
சல்லியந்து, கட்டலோனியா, ஸ்பெயின்
இறப்புஅக்டோபர் 24, 1870(1870-10-24) (அகவை 62)
பிரான்ஸ்
ஏற்கும் சபை/சமயங்கள்ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
அருளாளர் பட்டம்பெப்ரவரி 25, 1934, ரோம் by பதினோராம் பயஸ்
புனிதர் பட்டம்மே 7, 1950, ரோம் by பன்னிரண்டாம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்விக், ஸ்பெயின்
திருவிழாஅக்டோபர் 24
அக்டோபர் 23 (உள்ளூர் நாட்காட்டிகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கம்)
பாதுகாவல்நெசவுத் தொழிலாளி, மறைப்போதகர், நற்செய்தி பணியாளர், பேராயர், கிளரீசியர், அமல மரியின் மறைப்போத மைந்தர்.

புனித அந்தோனி மரிய கிளாரட் (ஸ்பானியம்: San Antonio Maria Claret y Clarà, டிசம்பர் 23, 1807 - அக்டோபர் 24, 1870) என்பவர் ஸ்பெயினின் கட்டலோனிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகரும், நற்செய்தி பணியாளரும், பேராயரும் ஆவார். இறையன்பை முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். 1849, ஜூலை 16 ஆம் நாள் இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் என்ற சபையை நிறுவினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அந்தோனி கிளாரட் ஸ்பெயினின் சல்லியந்து நகரில் ஒரு நெசவுத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் தனது 12வது அகவையில் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். அங்கிருந்து பார்சிலோனா நகருக்கு சென்றார். 20வது அகவை வரை அங்கேயே தங்கியிருந்து நெசவுத் தொழிலில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில் இலத்தீன், மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்கலானார்.[1][2]

சமய வாழ்க்கையில் இவர் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டு 1829 ஆம் ஆண்டில் விக் என்ற இடத்தில் கிறிஸ்தவ சமயக் கல்விக்கூடம் ஒன்றில் சேர்ந்தார். 1835 ஆம் ஆண்டு ஜூன் 13 இல் குருப்பட்டம் பெற்றார். தொடர்ந்து 1839 வரை வேதவியல் படித்துத் தேறினார். கட்டலோனியாவிலும் கனேரி தீவுகளிலும் மறைப்போதகப் பணிப்பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார்.

ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் 1847 ஆம் ஆண்டு ஒரு சில குருக்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணில்லாத புத்தகங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். அக்கால கட்டத்தில் ஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க கிளாரட்டின் வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் 14 மாதங்கள் கனேரிய தீவுகளில் அவர் பணிசெய்து வந்தார். கனேரிய தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது.[1] இருந்தும் அவர் ஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார்.[3]

மீண்டும் விக் திரும்பி 1949 ஜூலை 16 ஆம் நாள் ஐந்து குருக்களோடு சேர்ந்து இன்று கிளரீசியன் சபையாக விளங்கும் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் (Congregation of the Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார்.[3] பார்சிலோனாவில் மிகப் பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். இது இன்று கிளாரட் நூலகம் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 St. Anthony Claret, Restless Apostle, Claretian Publications, Chicago, Illinois
  2. Callahan, William James. Church, politics, and society in Spain, 1750-1874 p.298, 1984 "Antonio Claret (1807-1870), the son of a Catalan textile manufacturer, ... After serving as a parish assistant, he began a successful career as a missionary in Catalonia during the 1840's."
  3. 3.0 3.1 MacErlean, Andrew. "Ven. Antonio María Claret y Clará." The Catholic Encyclopedia. Vol. 16 (Index). New York: The Encyclopedia Press, 1914. 31 Dec. 2012

vவெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_மரிய_கிளாரட்&oldid=3312751" இலிருந்து மீள்விக்கப்பட்டது