லூக்கா (நற்செய்தியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்செய்தியாளரான
புனித லூக்கா
புனித லூக்கா, மரியாவை வரைகின்றார்
ஓவியர்: குர்சினோ
திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி
பிறப்புஅந்தியோக்கியா, சிரியா, உரோமைப் பேரரசு
இறப்புசுமார் 84
கிரேக்க நாடு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகள்
திருவிழா18 அக்டோபர்
சித்தரிக்கப்படும் வகை(இறக்கை உடைய) எருது, நான்கு நற்செய்தியாளர்களோடு, மருத்துவராக, ஆயராக, புத்தகத்தோடு அல்லது மரியாவை வரைவது போன்று.
பாதுகாவல்கலைஞர்கள், மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள் மற்றும் பலர்[1]
குறிப்பிடத்தக்க படைப்புகள்லூக்கா நற்செய்தி
அப்போஸ்தலர் பணி

நற்செய்தியாளரான புனித லூக்கா (பண்டைக் கிரேக்கம்Λουκᾶς, Loukás) ஒரு ஆதி கிறித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின் படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.

இவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார்.[2][3][4][5][6][7] இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11இல் காணக்கிடைக்கின்றது.

இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவர் தனது 84ஆம் அகவையில் மரித்தார் என்பர்[8]. இவரின் மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357இல் கொண்டுவரப்பட்டன. இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Saint Luke the Evangelist". Star Quest Production Network. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
  2. The New Testament Documents: Their Origin and Early History, George Milligan, 1913, Macmillan and Co. limited, p. 149
  3. Saint Luke Catholic Online article
  4. Saints: A Visual Guide, Edward Mornin, Lorna Mornin, 2006, Eerdmans Books, p. 74
  5. Saint Luke Catholic Encyclopedia article
  6. New Outlook, Alfred Emanuel Smith, 1935, Outlook Pub. Co., p. 792
  7. New Testament Studies. I. Luke the Physician: The Author of the Third Gospel, Adolf von Harnack, 1907, Williams & Norgate; G.P. Putnam's Sons, p. 5
  8. Michael Walsh, ed. "Butler's Lives of the Saints." (HarperCollins Publishers: New York, 1991), pp. 342.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்கா_(நற்செய்தியாளர்)&oldid=3570285" இலிருந்து மீள்விக்கப்பட்டது