உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்26 ஜூன் 684
ஆட்சி முடிவு8 மே 685
முன்னிருந்தவர்இரண்டாம் லியோ
பின்வந்தவர்ஐந்தாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்பெனடிக்டுஸ் செபெலுஸ்
பிறப்பு635
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
இறப்பு(685-05-08)8 மே 685
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட் என்பவர் திருத்தந்தையாக 684 முதல் 685 வரை இருந்தவர். இவர் இரண்டாம் லியோவின் இறப்புக்கு பின் 683இல் தேர்வு செய்யப்பட்டாலும் நான்காம் கான்ஸ்டன்டைன் மன்னனின் ஒப்புதலைப் பெற காலதாமதம் ஆனதால் 684இல் பதவி ஏற்றார்.[1][2][3]

Monothelitism என்னும் பதித்த கொள்கையினை அடக்க 678இல் நடந்த மூன்றாம் கான்ஸ்டன்டைன் பொதுச்சங்கத்தில் அந்தியோக்கு நகர ஆயரை திருச்சபையை விட்டு விலக்கினார்.

இவர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே திருத்தந்தையாக இருந்த போதிலும், உரோமை நகரில் பல கோவில்களை இவர் சீரமைத்தார் என்பர். இவர் 8 மே 685இல் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1.  One or more of the preceding sentences தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: Mann, Horace (1907). "Pope St. Benedict II". Catholic Encyclopedia 2. நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 
  2. "Butler, Alban. The Lives of the Saints. 1866". 12 January 2023.
  3. "St Benedict II", A Dictionary of Popes, 2nd ed. (J. N. D. Kelly and Michael J. Walsh, eds.) OUP, 2014 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199295814
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
684–685
பின்னர்