பதினொன்றாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை பதினொன்றாம் லியோ | |
---|---|
ஆட்சி துவக்கம் | 1 ஏப்ரல் 1605 |
ஆட்சி முடிவு | 27 ஏப்ரல் 1605 |
முன்னிருந்தவர் | எட்டாம் கிளமெண்ட் |
பின்வந்தவர் | ஐந்தாம் பவுல் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 22 ஜூலை 1567 அந்தோனியோ அல்தொவிதி-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | பிராசெஸ்கோ பசெகோ தெ விலெனா-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 12 டிசம்பர் 1583 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அலெஸ்ஸாந்ரோ ஒதாவியானோ தெ மெடிசி |
பிறப்பு | பிலாரன்சு | 2 சூன் 1535
இறப்பு | 27 ஏப்ரல் 1605 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை 69)
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை பதினொன்றாம் லியோ (2 ஜூன் 1535 – 27 ஏப்ரல் 1605; இயற்பெயர்: அலெஸ்ஸாந்ரோ ஒதாவியானோ தெ மெடிசி) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 1605ஆம் ஆண்டு 1 ஏப்ரல் முதல் 27 ஏப்ரல் வரை திருத்தந்தையாக இருந்தவர் ஆவார்.[1] இவர் பிலாரன்சு நகரில்[2] பிராசெஸ்கோ சல்வியாதி மற்றும் ஒதாவியானோ தெ மெடிசி ஆகியோருக்கு பிறந்தவர். திருத்தந்தை பத்தாம் லியோவின் உடன் பிறந்தவரின் மகன் இவர்.[3]
22 ஜூலை 1567இல் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1569 முதல் 1584 வரை திருத்தந்தை ஐந்தாம் பயஸால் பிலாரன்சுக்கான திருப்பீடத்தூதுவராக நியமிக்கப்பட்டார்.[4]
பதின்மூன்றாம் கிரகோரி இவரை 1573இல் பிஸ்தோயாவின் ஆயராகவும், 1573இல் பிலாரன்சின் பேராயராகவும்,[5] 1583இல் கர்தினாலாகவும் உயர்த்தினார்.[2] 1596 இல் எட்டாம் கிளமெண்ட் இவரை பிரான்சு நாட்டுக்கு தூதுவராக அனுப்பினார்.[6] இவர் புனித பிலிப்பு நேரியாரின் நண்பரும் சீடரும் ஆவார்.
திருத்தந்தையாக
[தொகு]திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் இறந்த 11 நாட்களுக்கு பிறகு 1 ஏப்ரல் 1605இல் இவர் திருத்தந்தையாக தேர்வானார். தனது மாமா திருத்தந்தை பத்தாம் லியோவுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவரின் பெயரையே ஏற்றார்.[2] தேர்வாகும்போது இவருக்கு அகவை 70. இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்தில் நடந்த பதவியேற்பு நிகவினால் ஏற்பட்ட களைப்பு மற்றும் சளியின் காரனமாக தேர்வாகி 27 நாட்களிலேயே இவர் இறந்தார்.[7] மிகக்குறுகிய காலம் ஆண்டதினால் இவரை மின்னல் திருத்தந்தை ("Lightning Pope") என அழைப்பர்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Popes," Catholic Encyclopedia (2009); retrieved 2013-3-15.
- ↑ 2.0 2.1 2.2 "திருத்தந்தை பதினொன்றாம் லியோ", Catholic Encyclopedia; retrieved 2013-3-15.
- ↑ Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 2000), 298.
- ↑ Sally J. Cornelison, Art and the Relic Cult of St. Antoninus in Renaissance Florence, (Ashgate Publishing, 2012), 126.
- ↑ Richard P. McBrien, Lives of the Popes, 298.
- ↑ Leo XI, Bernard Barbiche, The Papacy: An Encyclopedia, Vol. II, ed. Philippe Levillain, (Routledge, 2002), 929.
- ↑ George L. Williams, Papal Genealogy:The Families and Descendants of the Popes, (McFarland & Company, 1998), 75.