உள்ளடக்கத்துக்குச் செல்

பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
பதினொன்றாம் கிரகோரி
திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி
ஆட்சி துவக்கம்30 டிசம்பர் 1370
ஆட்சி முடிவு27 மார்ச் 1378
முன்னிருந்தவர்ஐந்தாம் அர்பன்
பின்வந்தவர்ஆறாம் அர்பன்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு2 ஜனவரி 1371
ஆயர்நிலை திருப்பொழிவு3 ஜனவரி 1371
கர்தினாலாக உயர்த்தப்பட்டது29 மே 1348
பிற தகவல்கள்
இயற்பெயர்பியேர் ரோஜர் தெ பியுஃபோர்ட்
பிறப்புc. 1329
Maumont, Limousin, Kingdom of France
இறப்பு(1378-03-27)27 மார்ச்சு 1378
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்
பதினொன்றாம் கிரகோரியின் உருவம் பதிக்கப்பட்ட காசு

திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XI; c. 1329 – 27 மார்ச் 1378) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 டிசம்பர் 1370 முதல் 1378இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த ஏழாவதும் கடைசித் திருத்தந்தையும் ஆவார்.[2]

இவரின் இயற்பெயர் பியேர் ரோஜர் தெ பியுஃபோர்ட் ஆகும். சுமார் 1330இல் பிரான்சுப்பேரரசின் மமுத் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் திருத்தந்தை ஆறாம் கிளமெண்டின் உடன் பிறந்தவரின் மகன்.[3] திருத்தந்தை ஐந்தாம் அர்பனுக்குப் பின்னர் 1370இல் நடந்த தேர்தலில் திருத்தந்தையாக தேர்வானார்.

திருத்தந்தையாக

[தொகு]

ஜான் விக்லிஃபின் படிப்பினைகளை இவர் 1374இலும் 1377இலும் இருமுறை அதிகாரப்பூர்வமாக கண்டித்தார்.[4][5] 17 ஜனவரி 1377 அன்று இவர் உரோமைக்கு திருப்பீடத்தை மீண்டும் கொண்டுவந்தார். இது சியன்னா கத்ரீனின் கடுமைடான செற்களால் தூண்டப்பட்டது என்பர்.[6] இது இவருக்கு முன்பு திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் அர்பனால் முயலப்பட்டு பிராரன்சு அரசுடனான மோதலால் கைவிடப்பட்டது.[7]

இறப்பு

[தொகு]

இவர் உரோமைக்கு வரும் வழியில் 27 மார்ச் 1378 அன்று இறந்தார்.[8] அடுத்தநாள் புனித மரிய நூவா கோவிலில் இவர் புதைக்கப்பட்டார்.[9] உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் நாபொலியினரான பார்தலோமியோ பிரிக்னானோ திருத்தந்தை ஆறாம் அர்பன் என தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் தேர்வானப்புதியவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், கர்தினால்கள் அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி அதே ஆண்டு செப்டம்பர் 20 அன்று ஏழாம் கிளமெண்டை தேர்வு செய்தனர். இது "மேற்கு சமயப்பிளவுக்கு" காரணியாயிற்று.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1.   "Pope Gregory XI". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2. Richard P. McBrien, Lives of the Popes, (HarperCollins, 2000), 245.
  3. George L. Williams, Papal Genealogy: The Families and Descendants of the Popes, (McFarland Company Inc., 1998), 43.
  4. Ocker, p. 62
  5. "The Condemnation of Wycliffe". Plato.stanford.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  6. Francis Thomas Luongo, The Saintly Politics of Catherine of Siena, (Cornell University Press, 2006), 25.
  7. Francis Thomas Luongo, The Saintly Politics of Catherine of Siena, xii.
  8. Carol M. Richardson, Reclaiming Rome: Cardinals in the Fifteenth Century, ed. A.J. Vanderjagt, (Brill, 2009), 1.
  9. F Donald Logan, A History of the Church in the Middle Ages, (Routledge, 2002), 308.
  10. Joseph Dahmus, A History of the Middle Ages, 381.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
30 டிசம்பர் 1370 – 27 மார்ச் 1378
பின்னர்