ஏழாம் அர்பன் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழாம் அர்பன்
228ஆம் திருத்தந்தை
Urban VII.jpg
ஆட்சி துவக்கம்15 செப்டம்பர் 1590
ஆட்சி முடிவு27 செப்டம்பர் 1590
முன்னிருந்தவர்ஐந்தாம் சிக்ஸ்துஸ்
பின்வந்தவர்பதினான்காம் கிரகோரி
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு30 மார்ச் 1553
ஃபிலிப்போ அர்சின்தோ-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு4 ஏப்ரல் 1553
கொரோலாமோ வெரல்லோ-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது12 டிசம்பர் 1583
பிற தகவல்கள்
இயற்பெயர்கியோவானி பதிஸ்தா கஸ்தாக்னா
பிறப்புஆகத்து 4, 1521(1521-08-04)
உரோமை நகரம், பாப்பரசு நாடுகள்
இறப்பு27 செப்டம்பர் 1590(1590-09-27) (அகவை 69)
உரோமை நகரம், பாப்பரசு நாடுகள்
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஏழாம் அர்பன் (Pope Urban VII) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 15 செப்டம்பர் 1590 முதல் 27 செப்டம்பர் 1590 வரை பதிமூன்று நாட்கள் ஆட்சி செய்தார். மிகக் குறுகியக்காலம் திருத்தந்தையாக ஆட்சி செய்தவர் இவரே. இவர் உரோமையில் பிறந்தவர். 1584இல் இவர் சான் மர்செல்லோவின் கர்தினால்-குருவாக உயர்தப்பட்டார். இவருக்கு முன் பதவியிலிருந்த ஐந்தாம் சிக்ஸ்துஸுக்கு பின் இவர் கத்தோலிக்க திருச்சபையின் 228ஆம் திருத்தந்தையாக 15 செப்டம்பர் 1590இல் தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் 27 செப்டம்பர் 1590இல் இவர் மலேரியாவால் தனது முடிசூட்டு விழாவுக்கு முன்பே இறந்தார்.

திருத்தந்தை ஆவதற்கு முன் இவர் போலோங்கா வின் ஆளுனராகவும், ரோசான்னோவின் பேராயராகவும் இருந்தவர். பலவருடங்களுக்கு இவர் எசுப்பானியாவில் திருத்தந்தையின் தூதராக பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தேர்வை எசுப்பானியர்கள் மிகவும் ஆதரித்தனர்.

இவரின் மிகக்குறுகிய ஆட்சிக்காலத்திலேயே உலகின் முதல் புகையிலை பிடித்தலுக்கு எதிரானத் தடை விதிக்கப்பட்டது. இவர் கிறித்தவத் தேவாலயங்களிலோ ஆலய வளாகத்திலோ புகையிலையை வாயில் மென்றோ, புகைத்தோ, பொடியாக மூக்கு வழியாய் முகர்ந்தோ பயன்படுத்துபவர்களை திருச்சபையினை விட்ட விளக்கிவைக்க உத்தரவிட்டார்.[1].

ஆதாரங்கள்[தொகு]

  1. "Public smoking ban: Europe on the move" (PDF). European Society of Cardiology. 2006. 24 மே 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 11 பிப்ரவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஐந்தாம் சிக்ஸ்துஸ்
திருத்தந்தை
15–27 செப்டம்பர் 1590
பின்னர்
பதினான்காம் கிரகோரி