உள்ளடக்கத்துக்குச் செல்

நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை
நான்காம் ஏட்ரியன்
ஆட்சி துவக்கம்4 டிசம்பர் 1154
ஆட்சி முடிவு1 செப்டம்பர் 1159
முன்னிருந்தவர்நான்காம் அனஸ்தாசியுஸ்
பின்வந்தவர்மூன்றாம் அலெக்சாண்டர்
பிற தகவல்கள்
இயற்பெயர்நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர்
பிறப்புசுமார் 1100
அபோட்ஸ் லாங்லி, ஹெர்ட்ஃபொர்ட்ஷர், இங்கிலாந்து இராச்சியம்
இறப்பு(1159-09-01)1 செப்டம்பர் 1159
அனாக்னி, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு
ஏட்ரியன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

நான்காம் ஏட்ரியன் அல்லது நான்காம் ஹேட்ரியன் (அதிரியான்) (இலத்தீன்: Adrianus IV; பி. சுமார். 1100 – இ. 1 செப்டம்பர் 1159) என்பவர் 4 டிசம்பர் 1154 முதல் 1159இல் தனது இறப்புவரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவராவார். இவரின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர் ஆகும். இதுவரை திருத்தந்தை பணிப்பொறுப்பினை வகித்த ஒரே ஆங்கிலேயர் இவர் ஆவார்.[1][2]

வாழ்கைச் சுருக்கம்[தொகு]

இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிஞ்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது திருத்தந்தை மூன்றாம் யூஜின் இவரை அல்பானோவின் கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார். 1154 டிசம்பர் 4-ல் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான்காம் ஏட்ரியன் என்ற பெயர் சூடிக்கொண்டார்.

சிசிலி நாட்டு அரசர் வில்லியம், வெளிப்படையாகவே ஏட்ரியனின் திருத்தந்தை தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தார். காம்பாஞ்ஞாவிலிருந்த குறுநில அதிபர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டதோடு நின்று விடாமல், திருத்தந்தையையும் தாக்க முனைந்தனர். திருத்தூர்களின் கல்லறைகளுக்கு வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர். பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் உரோமையில் தடை உத்தரவுபோடப்பட்டது. இதனால் விட்டர்போ சென்றார் திருத்தந்தை. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் (Roman Senate) விடர்போவுக்குச் சென்று திருத்தந்தையிடம் இனி கலவரங்களை உருவாக்காமலிருப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனால் திருத்தந்தை உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mackie, John Duncan (1907). Pope Adrian IV: The Lothian Essay, 1907. Blackwell. p. 2.
  2. The English Pope by George F. Tull
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
1154–59
பின்னர்