உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் போனிஃபாஸ்
ஆட்சி துவக்கம்ஏப்ரல் 896
ஆட்சி முடிவுஏப்ரல் 896
முன்னிருந்தவர்ஃபொர்மோசுஸ்
பின்வந்தவர்ஆறாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
ரோம், இத்தாலி
இறப்புஏப்ரல் 896
???
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது.

வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் (Spoleto) கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.

898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
896
பின்னர்