யுட்டீக்கியன் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித யுட்டீக்கியன்
Pope Saint Eutychian
27ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்ஜனவரி 4, 275
ஆட்சி முடிவுடிசம்பர் 7, 283
முன்னிருந்தவர்முதலாம் ஃபெலிக்ஸ்
பின்வந்தவர்காயுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்யுட்டீக்கியானுஸ்
பிறப்புதெரியவில்லை
தெரியவில்லை
இறப்பு(283-12-07)திசம்பர் 7, 283
உரோமை நகரம், உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாடிசம்பர் 8
ஏற்கும் சபைஉரோமன் கத்தோலிக்கம்
பகுப்புஆயர், திருத்தந்தை

திருத்தந்தை புனித யுட்டீக்கியன் (Pope Saint Eutychian) அல்லது யுட்டீக்கியானுஸ் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சனவரி 4, 275 முதல் டிசம்பர் 7, 283 வரை ஆட்சி செய்தார்.[1][2]

கல்லறை கண்டுபிடிப்பு[தொகு]

1854இல் ஜோவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் உரோமை நகரில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தார்.(catacomb of Callixtus) அங்கு பல திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தந்தை யுட்டீக்கியனின் கல்லறையின் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள அக்கல்வெட்டிலிருந்து யுட்டீக்கியனின் கல்லறை இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது. இவரே அக்கல்லறையில் இறுதியாகப் புதைக்கப்பட்ட திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.[3]

இவரின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறித்துக் கருத்து வேறுபாடு உள்ளது. திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால ஏட்டின்படி, இவர் 8 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆட்சிசெய்தார். ஆனால் யூசேபியஸ் (Eusebius) என்னும் பண்டைக்கால வரலாற்றறிஞர், அவர் 10 மாதங்களே திருத்தந்தையாக ஆட்சிசெய்தார் என்கிறார்.

கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு இரத்தம் சிந்தி இறந்த 324 பேரை யுட்டீக்கியன் அடக்கம் செய்தார் என்றும், திராட்சைப் பழம் மற்றும் அவரை விதைகளை ஆசீர்வதிக்கும் பழக்கம் இவரால் தொடங்கப்பட்டது என்றொரு செய்தி உள்ளது. ஆனால் இதற்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை. ஏனெனில் உரோமை மன்னன் அவுரேலியனின் (Aurelian) இறப்புக்குப் பின்பு கிறித்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. மேலும் நிலத்தின் விளைச்சலை ஆசீர்வதிப்பது பிற்கால பழக்கமாகும்.

திருவிழா[தொகு]

திருத்தந்தை புனித யுட்டீக்கியனின் திருவிழா திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவரது இறப்புக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் காலத்தில் கிறித்தவம் மீண்டும் துன்புறுத்தப்பட்டது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pope Eutychian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. According to the Annuario Pontificio of 2003
  2. யுட்டீக்கியன்
  3. காண்க: Kraus, Roma sotterranea, p. 154 et seq.,

வெளி இணைப்புகள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் ஃபெலிக்ஸ்
உரோமை ஆயர்
திருத்தந்தை

275–283
பின்னர்
காயுஸ்