பிலிப்பு (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தூதரான புனித பிலிப்பு
Rubens apostel philippus.jpg
புனித பிலிப்பு, ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ்
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி
பிறப்புUnknown
பெத்சாயிதா, கலிலேயா
இறப்புc.80
ஹிராபோலிஸ், சிலுவையில் அறையப்பட்டு
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவ பிரிவுகளும்
திருவிழா3 மே - கத்தோலிக்கம், 14 நவம்பர் - கிழக்கு மரபுவழி திருச்சபை
சித்தரிக்கப்படும் வகைவயதான தாடி வைத்த மனிதராகவோ அல்லது ஒரு அப்பக்கூடையையும் சிலுவையையும் வைத்திருப்பது போன்றோ
பாதுகாவல்உருகுவை.

திருத்தூதரான புனித பிலிப்பு (கிரேக்க மொழி: [Φίλιππος, Philippos] error: {{lang}}: text has italic markup (உதவி)) இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறித்தவப் பாரம்பரியப்படி, இவரே கிரேக்கம், சிரியா முதலிய நாடுகளுக்கு கிறித்தவத்தைக் கொண்டுசென்றவர்.

பிலிப்பு எழுதிய நற்செய்தி என்னும் நாக் அமாடி நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டது போல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஆகும்.

இவரின் விழாநாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு (திருத்தூதர் யாக்கோபு அல்ல) சேர்ந்து மே 3இல் கொண்டாடப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டில்[தொகு]

ஒத்தமை நற்செய்தி நூல்கள் இவரை இயேசுவின் சீடர் என்கிறது.Jn 1:43Mt 10:3Mk 3:18Lk 6:14 இவரும் அந்திரேயா மற்றும் பேதுருவைப்போல பெத்சாயிதாவைச் சேர்ந்தவர்.Jn 1:43–44

நத்தானியேல் என அழைக்கப்பட்ட திருத்தூதரான பர்த்தலமேயுவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியவர் இவரே.Jn 1:45–47 ஐயாயிரம் மக்களிக்கு அப்பம் பலுகச்செய்து உணவளித்த புதுமைக்கு முன்பு, இயேசு இவரைச்சோதித்தார்Jn 6:4-7.

இவருக்கு கிரேக்கம் தெரிந்திருந்ததால் இவர் கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்காண வந்தபோது அவர்களை இயேசுவிடம் கூட்டிவந்தார்.Jn 12:20–36. இயேசுவின் இறுதி இரா உணவின் போது, "தந்தையை எங்களுக்கு காட்டும்"Jn 14:8–11 என்று பிலிப்பு கேட்க, இயேசு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றி விலக்கினார்.

புனித பிலிப்புவின் பெயர் எல்லாத் திருத்தூதர்களின் பட்டியல்களிலும் ஐந்தாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.Mt 10:3 Mk 3:18 Lk 6:14 Acts 1:13