சிலுவையின் புனித யோவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிலுவையின் புனித யோவான்
Saint John of the Cross
சிலுவையின் புனித யோவான்
ஆதினத் தலைவர், மறைவல்லுநர்
பிறப்புசூன் 24, 1542(1542-06-24)
போண்டிவேரோஸ், எசுப்பானியா[1][2]
இறப்புதிசம்பர் 14, 1591(1591-12-14) (அகவை 49)
ஊபெதா, அந்தலூசியா, எசுப்பானியா
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன்
அருளாளர் பட்டம்திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்-ஆல் ஜனவரி 25 1675
புனிதர் பட்டம்திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்-ஆல் டிசம்பர் 27 1726
முக்கிய திருத்தலங்கள்எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
திருவிழாடிசம்பர் 14
பாதுகாவல்தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்


சிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கில மொழி: Saint John of the Cross, சூன் 24, 1542டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.

கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thompson, C.P., St. John of the Cross: Songs in the Night, London: SPCK, 2002, p. 27.
  2. Roth, Norman. Conversos, Inquisition, and the Expulsion of the Jews from Spain, Madison, WI: The University of Wisconsin Press, 1995, pp. 157, 369