தீவிரவாதியாய் இருந்த சீமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித சீமோன்
புனித சீமோன்,
ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (சுமார்: கி.பி 1611இல்)
திருத்தூதர், இரத்தசாட்சி
பிறப்புகானான்
இறப்பு~65 அல்லது ~107[1]
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை; கிழக்கு மரபுவழி திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்; லூதரனியம்;
முக்கிய திருத்தலங்கள்துலூஸ்; புனித பேதுரு பேராலயம்[2]
திருவிழாஅக்டோபர் 28 (கிழக்கு கிறித்தவம்); மே 10 (மரபு வழி திருச்சபைகள்)
சித்தரிக்கப்படும் வகைபடகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு[2]
பாதுகாவல்மரம் வெட்டுவோர், கரியர்கள்[2]


தீவிரவாதியாய் இருந்த சீமோன் (Simon the Zealot) அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.

இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.

இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "St. Simon the Apostle" (Italian). Blessed Saints and Witnesses (2005-03-15). பார்த்த நாள் 29 மார்ச் 2010.
  2. 2.0 2.1 2.2 Jones, Terry H. "Saint Simon the Apostle". Saints.SQPN.com. பார்த்த நாள் 29 மார்ச் 2010.