மரியா, மாற்கு எனப்படும் யோவானின் தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியா, மாற்கு எனப்படும் யோவானின் தாய் என்பவர் திருத்தூதர் பணிகள் 12:12இல் குறிக்கப்படும் நபர் ஆவார். அதன் படி புனித பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டப்பின்பு இவரின் வீட்டுக்குப் போனார்:

அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.[1]

விவிலியம் முழுவதிலும் இந்த ஒரு குறிப்பு மட்டுமே இவரைக்குறித்து உள்ளது. நற்செய்தியாளர் மாற்குவின் தாய் இவர் என்பதில் அறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  • Easton's Bible Dictionary, 1897