பர்னபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்னபா
Barnabas.jpg
புனித பர்னபா, திருவோவியம்
இறைவாக்கினர், சீடர், அந்தியோக்கியா மற்றும் சைப்பிரஸின் திருத்தூதர், மறைப்பணியாளர் மற்றும் மறைசாட்சி
பிறப்புதகவல் இல்லை
சைப்பிரஸ்
இறப்பு61 கி.பி
சைப்பிரஸ்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்புனித பர்னபா மடம், சைப்பிரஸ்[1]
திருவிழாஜூன் 11
சித்தரிக்கப்படும் வகைகைத்தடி; ஒலிவ மரக் கிளை; மத்தேயு நற்செய்தியினை ஏந்திய படி
பாதுகாவல்சைப்பிரஸ், அந்தியோக்கியா, ஆலங்கட்டி மழையிலிருந்து காக்கப்பட, அமைதி ஏற்பட

பர்னபா (பண்டைக் கிரேக்கம்Βαρναβᾶς), இயற்பெயர் யேசேப்பு, என்பவர் ஆதி கிறித்தவரும் இயேசுவின் சீடர்களுல் ஒருவரும் ஆவார்.[2][3] திருத்தூதர் பணிகள் 4:36இன் படி இவர் சைப்பிரஸில் வாழ்ந்த யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக்குறிக்கின்றது. இவரும் பவுலும் திருத்தூது பயணங்கள் மேற்கொண்டு யூத கிறித்தவர்களிடம் புறவினத்தாரான கிறித்தவர்களுக்காக பரிந்து பேசினர்.[2] இவர்கள் இருவரும் எருசலேம் சங்கத்தில் கலந்து கொண்டனர்.[4] பர்னபா மற்றும் பவுல் அனத்தோலியாவில் தொழுகைக் கூடங்களுக்கு வந்திருந்த புறிவினத்தார் பலரை மனந்திருப்பினர்.[5]

பர்னபாவைக்குறிது திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுலின் திருமுகங்களிலும் காணக்கிடைக்கின்றது.[2] திர்தூளியன் இவரை எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர் எனக்குறிக்கின்றார்.,[2] ஆயினும் இதற்கு எவ்வித சான்றும் இல்லை.[6]

சுமார் கி.பி 61இல் பர்னபா மறைசாட்சியாக சைப்பிரஸில் கொல்லப்பட்டார் என்பது மரபு.[2] இவர் சைப்பிரஸ் மரபுவழி திருச்சபையினை நிறுவியவர் என நம்பப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா நாள் ஜூன் 11ஆம் ஆகும்.[2]

கொலோசையர் (நூல்) 4இன் அடிப்படையில் பர்னபா, மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது.[7] சில மரபுகளின் படி எழுபது சீடர்களில் ஒருவராகக்கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாவின் சகோதரராக நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. *St Barnabas Monastery
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Barnabas." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
  3. Harris names him as a "prominent leader" of the early church in Jerusalem. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: மேfield. 1985.
  4. Durant, Will. Caesar and Christ. New York: Simon and Schuster. 1972
  5. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: மேfield. 1985.
  6. "Hebrews, Epistle to the" Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
  7. Mark: Images of an Apostolic Interpreter p55 C. Clifton Black - 2001 "infrequent occurrence in the Septuagint (Num 36:11; Tob 7:2) to its presence in Josephus (JW 1.662; Ant 1.290, 15.250) and Philo (On the Embassy to Gaius 67), anepsios consistently carries the connotation of "cousin," though ..."
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னபா&oldid=2184826" இருந்து மீள்விக்கப்பட்டது