யோபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோபு
யோபுவின் ஏழ்மை நிலையைக் காட்டும் சித்திரம்
நீதிமான்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்பலர்
யூதர், கிறித்தவர், இசுலாமியர்

யோபு (ஆங்கில மொழி: Job; /ˈb/; எபிரேயம்: אִיּוֹב/[invalid input: 'ʾIyyôḇ']/) என்பவர் கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோபு நூலின் நாயகன் ஆவார். விவிலியத்தில் இவரைப்பற்றியக் குறிப்புகள் யோபு நூலுக்கு வெளியே எசேக்கியேல் நூலிலும்[1], யாக்கோபு நூலிலும் காணக்கிடைக்கின்றது.[2] இவர் நபி என திருக்குர்ஆனிலும் குறிக்கப்பட்டிருகின்றார்.[3]

பெயர்[தொகு]

யோபு என்னும் பெயர் மூல எபிரேயத்தில் אִיּוֹב‎ என்று அழைக்கப்படுகிறது. இலத்தீனில் Job/Iob என்று உள்ளது. இப்பெயரின் பொருள் வெறுக்கப்படுபவர் அல்லது வதைக்கப்படுபவர் என்பதாகும்.[4]

வரலாற்று சுறுக்கம்[தொகு]

முக்காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக யோபு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு தனது மக்களையும், சொத்து சுகத்தையும், உடல் நலத்தையும் ஒவ்வொன்றாக இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத்தூற்ற வில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இவரின் வாழ்வை சித்தரிக்கும் விவிலியத்தில் இடம் பெறும் யோபு நூல்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
யோபு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Ezekiel 14:14–18
  2. James 5:11
  3. குர்ஆன் 21:83; 38:41;
  4. Meaning, Origin and History of the Name Job
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோபு&oldid=3095214" இலிருந்து மீள்விக்கப்பட்டது