சிமியோன்
Jump to navigation
Jump to search
சிமியோன் | |
---|---|
![]() இறைவாக்கினர் சிமியோன்; ஓவியர்: அலெக்சி இகோரோவ்; காலம் 1830-40s | |
இறைவாக்கினர் | |
ஏற்கும் சபை/சமயம் | கிழக்கு மரபுவழி திருச்சபை கத்தோலிக்க திருச்சபை ஆங்கிலிக்க ஒன்றியம் லூதரனியம் |
முக்கிய திருத்தலங்கள் | புனித சிமியோன் தேவாலயம், சர்டார், குரோவாசியா |
திருவிழா | பெப்ரவரி 2 பெப்ரவரி 3 பெப்ரவரி 15 |
சித்தரிக்கப்படும் வகை | குழந்தை இயேசுவை தாங்குவது போல குருத்துவ ஆடையில் |
சிமியோன் என்பவர் லூக்கா நற்செய்தியின்படி[1] இயேசுவின் பிறப்பின்போது எருசலேமில் வாழ்ந்தவர். இவரை நேர்மையானவர் எனவும் இறைப்பற்றுக் கொண்டவர் எனவும் அந்த நற்செய்தி குறிக்கின்றது. இவர் 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார் எனவும் விவிலியம் குறிக்கின்றது. இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க மரியாவும், யோசேப்புவும் கோவிலுக்கு வந்தபோது அவர்களை இவர் எதிர்கொண்டார். அப்போது இவர் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, ஒரு பாடல் படினார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை உட்பட பல கிறித்தவ பிரிவுகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா நாள் பெப்ரவரி 3.