சிரோன் ஊரானாகிய லூக்கியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரோன் ஊரானாகிய லூக்கியு (Loukios o Kurenaios, Λούκιος ὁ Κυρηναῖος) என்பவர் திருத்தூதர் பணிகள் நூலின்படி அந்தியோக்கியாவில் திருச்சபையினை நிறுவியவர் ஆவார்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.

— திருத்தூதர் பணிகள் 13:1

இவர் அந்தியோக்கியாவில் செய்தவைக்குறித்த மறிமுகக்குறிப்பு இதற்கு முன் அதிகாரங்களில் காணக்கிடைக்கின்றது :

ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்: வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.

— திருத்தூதர் பணிகள் 11:19-20

சிரோன் ஊரின் முதல் ஆயர் இவர் என்பது மரபு.[1]

உரோமையர் 16:21இல் சிரோன் என்னும் நபர் குறிக்கப்படுகின்றார். ஆயினும் அது இவரா என்பது அறிய வழி இல்லை. ஓரிஜன் போன்ற சிலர் நற்செய்தியாளர் லூக்கா இவர் எனக் கொள்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Walsh A New Dictionary of Saints p. 372
  2. Comm. Rom. 10.39