உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியா (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மத்தியா
திருத்தூதர்
பிறப்பு1ஆம் நூற்றாண்டு
யூதேயா (இன்றய இசுரேல்)
இறப்புசுமார். 80 கி.பி
யெரூசலம் அல்லது சியார்சியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
திருவிழாமே 14 (கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்)
ஆகஸ்ட் 9 (கிழக்கு மரபுவழி திருச்சபை)
பிப்ரவரி 24 (நெட்டாண்டுகளில் பிப்ரவரி 25) (1970க்கு முன் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி, லூதரனியம்)
சித்தரிக்கப்படும் வகைகோடரி[1]
பாதுகாவல்குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா; பெரியம்மை; தையற்கலைஞர்

புனித மத்தியா (எபிரேய மொழியில் ஒலிப்பு மத்தியாது) (இறப்பு. 80), என்பவர் அப்போஸ்தலர் பணிகளின் படி, யூதாசின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர்.[2] இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வரலாறு

[தொகு]

ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டப்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இச்செய்தியினைத்தவிர விவிலியத் திருமுறையில் இவரைப்பற்றி வேறெதுவும் இல்லை.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Saint Matthias". Catholic Saints. 2009. பார்க்கப்பட்ட நாள் மே 14, 2010.
  2. அப்போஸ்தலர் பணி 1:18-26.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியா_(திருத்தூதர்)&oldid=3175051" இலிருந்து மீள்விக்கப்பட்டது