மார்டின் தெ போரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மார்டின் தெ போரஸ்
துறவி
பிறப்பு(1579-12-09)திசம்பர் 9, 1579
லிமா, பெரு
இறப்புநவம்பர் 3, 1639(1639-11-03) (அகவை 59)
லிமா, பெரு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, லூதரனியம், ஆங்கிலிக்க ஒன்றியம்
அருளாளர் பட்டம்1837 by ஆறாம் கிரகோரி
புனிதர் பட்டம்மே 6, 1962, by இருபத்திமூன்றாம் யோவான்
முக்கிய திருத்தலங்கள்சாந்தோ தோமினிக்கோ கோவிலும் மடமும், லீமா, பெரு
திருவிழாநவம்பர் 3
சித்தரிக்கப்படும் வகைஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம்
பாதுகாவல்கருப்பின மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு-இன மக்கள், பெரு, ஏழை மக்கள், பொது கல்வி, சுகாதாரம், அரசு பள்ளிகள், இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ, பெருவியன் கடற்படை

மார்டின் தெ போரஸ் (திசம்பர் 9 1579 - நவம்பர் 3 1639) ஒரு தொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு-இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாளில் ஏழைகளுக்காக பல அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியவைற்றை நிறுவினார். இவர் ஏழ்மையில் வாழ்ந்து பல கடும் தவமுயற்சிகளை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரின் இயற்பெயர் ஜுவான் மார்டின் தெ போரஸ். இவர் எசுமானிய நாட்டை சேர்ந்த தந்தைக்கும், பனாமாவில் அடிமையாக இருந்து விடுதலைப்பெற்ற தாய்க்கும்[1] லிமாவில் திசம்பர் 9 1579இல் பிறந்தவர். இவருக்கு 1581இல் பிறந்த ஒரு இளைய சகோதரியும் உண்டு. மிக வறுமையில் வாடியதால் பத்துவயதிலேயே ஒரு மருத்துவரிடம் (Barber surgeon) வேலைபயில சென்றார். இந்த இளம் வயதிலேயே இரவு முழுவதும் செபிக்கும் பழக்கம் இவரிடம் இருந்தது.

தனது 15ஆம் அகவையில் தொமினிக்கன் சபையில் சேர விரும்பினார். முதலில் வேலையாளாகவே அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் பல முக்கிய பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் தொமினிக்கன் சபையில் சேர கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்த இவர் இச்சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.[2]

இவர் தனது 34ஆம் அகவையில் நோயுற்றவர்களைப் பாதுகாக்கவும் மருந்தகத்தின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இப்பணியிலேயே இவர் இறக்கும் வரை இருந்தார்.[3] அக்காலத்தில் லீமா நகரில் தொற்று நோய் பரவியதால் இவரின் பணி மிகவும் கடுமையாக இருந்தது.[4]

இறப்பும் புனிதர் பட்டமளிப்பும்[தொகு]

இவர் லீமா நகர புனித ரோஸின் நண்பராவார். இவர் லீமாவில் 1639 நவம்பர் மாதம் 3 நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு 1837இல் திருத்தந்தை ஆறாம் கிரகோரியால் அருளாளர் பட்டமும், மே 6, 1962இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.

இவரின் விழாநாள் 3 நவம்பர் ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "St. Martin de Porres, the first black saint in the Americas." African American Registry.' பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்'
  2. Biography in "The Saint Martin De Porres Prayer Book", p147-152
  3. Vie du Bienheureux Martin de Porrès, by Fr. Arthur M. Granger, O.P. (Dominican Press: St. Hyacinthe, 1941)
  4. ”Vie du Bienheureux Martin de Porrès, by Fr. Arthur M. Granger, O.P. (Dominican Press: St. Hyacinthe, 1941)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_தெ_போரஸ்&oldid=3351184" இலிருந்து மீள்விக்கப்பட்டது